பிராண சக்தியும் மனித வளமும்

February 6, 2016by

பிராண சக்தியும் மனித வளமும்

 

சு சிறீநந்தகுமார்

 

சமர்ப்பணம்

ஒரேயொரு மாதத்திற்குள், இதனை எழுதி முடிக்க துணை புரிந்த எல்லாம் வல்ல பரம்பொருளிற்கும், அதன் உறைவிடமான எல்லா ஜீவராசிகளுக்கும், எனக்கு ஆன்மீக அடிப்படை அறிவை தந்த எனது தந்தை, குருமார்களுக்கும், இந்த அனுபவத்தை அடைய தடையில்லாமல் என்னுடன் ஒத்துழைத்த என் மனைவிக்கும் இந்த அனுபவ நூலை சமர்ப்பிக்கின்றேன்.

 

அணிந்துரை

இன்றைக்கு ஆன்மீகம் ஆங்கிலத்தில் தெளிவாக வந்துவிட்டது. நிசர்க தத்தா, கிருஷ்ணா மூர்த்தி, ரமண மகரிஷி, திபெத்திய, மஹாயான, ஜென் என்று பலவும் இந்த பட்டியலில் கச்சிதமாக அடக்கம். ஆனால், இந்த விடயத்தில், தமிழ் பின்தங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இந்திலையில், பிராணாவைப்பற்றி பயிற்சியாளர் சிறீநந்தகுமார் அவர்கள் எழுதியது வரவேற்கத்தக்கது மட்டுமன்றிக் காலத்தின் கட்டாயமும் கூட. இந்த நூலுக்கு அறிமுகம் தருவதில் நாம் மிக்க மகிழ்ச்சியும் பாக்கியமும் பெறுகிறோம்.

இந்நூலைப் படித்து பார்த்தததில், யாவுமாகிய பிராணா போன்ற பிரபஞ்ச சக்தியை நமக்குள் புகுத்தி, தடையின்றி செல்ல அனுமதிப்பதன் மூலம், நமக்கும், மற்றவர்களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் உகந்த, சமநிலையான, முழுமையான ஒரு வாழ்க்கையை நாம் பெறமுடியும். இதற்கான நெறிகளை, பயிற்சி முறைகளை, கட்டமைப்புக்களை தமிழில் (நாமறிந்து) முதல் முறையாக பிராணா பயிற்சியாளர் சிறீநந்தகுமார் அவர்களது நூலில் பார்க்கிறோம். இத்தகைய விடயங்களை, அலாதியான, இலகுவான மொழிநடையுடன் சிறீநந்தகுமார் தன்னுடைய பிராணா பற்றிய கன்னி முயற்சியிலேயே தந்திருக்கிறார். இவற்றை எழுதுவதற்கு பல புதிய சொற்கோவைகளை அவர் உருவாக்க வேண்டியிருக்கிறது, அல்லது புதிய தொடர்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது. இந்த முயற்சி மேலும் தொடர்ந்து, தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவர் மேலும் பல நூல்களை அளிக்க வாழ்த்துக்கள் கூறி, நூலைப்படிக்க அழைக்கிறோம்.

அன்புடன்

சிவசண்முகம் மற்றும் ஞான பாரதி.

வண்ணம்.

 

 

முன்னுரை

பிராணா என்றால் என்ன?. 16

பிராணாவிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு.. 20

மனித உடலின் பல்வேறு கவசங்கள் (Layers). 21

எவ்வாறு பிராண சக்தி சிகிச்சை தொழிற்படுகின்றது… 22

குண்டலினி சக்தி.. 27

சக்கரம் என்றால் என்ன?. 29

பிராண சக்தி சிகிச்சையும் அனுபவங்களும்.. 31

 

முன்னுரை

பிராண சக்தியும் மனித வளமும்

பிராண சக்தி அல்லது பிராணா எனும் உயிர் அல்லது வாழ்க்கை விசை (சக்தி) பிரபஞ்சத்திலுள்ள யாவற்றையும் இயங்கச் செய்கின்ற ஓர் இயற்கை சக்தியாகும். எல்லா இயற்கை வைத்தியங்களும், சிகிச்சைகளும் இந்த உயிர்ச்சக்தியை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கும் புரிந்துணர்வைக் கொண்டே செயற்படுகின்றன. பிராண சிகிச்சை அல்லது ‘ரெக்கி’ (Reiki) என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் சிகிச்சை முறையானது மிகவும் பழமையானது. இந்த சிகிச்சைமுறை ‘கைவலிமை’ என்று திபேத்தியரியினரால் சமண சமயத்தில் கூறப்பட்டு பல நூற்றாண்டு காலமாக வழக்கில் உள்ளது.

ரெக்கி (Reiki), ஒரு ஜப்பானிய சொல்லாகும். இது Ray-Key, அதாவது REI – பிரபஞ்சமானது, KI – வலிமையான உயிர் சக்தி (life force) அதாவது, பிரபஞ்சமான வலிமையான உயிர்ச்சக்தி எனப்படுகிறது. இந்த உயிர்ச்சக்தியானது முதலில் இதனைச் செய்பவரின் (healer) உள்ளே நுழைந்து, அதன்பின் கை வழியாக இதனைப் பெருபவறினுள்ளே செல்கின்றது. இப்பிராணா உடல், மனம் (mind), உயிர் அல்லது ஆவி (spirit) என்பவற்றைச் சமநிலைப்படுத்துகின்றது.

பிரபஞ்ச உயிர்ச்சக்தி (பிராணா) எதனைச் செய்ய முடியும்?

இச்சிகிச்சை முறையால், புற்று நோயைக் குணப்படுத்தமுடியும், இரத்த அடைப்புக்களை நீக்கமுடியும்; நெஞ்சு எரிவுகளையும், வயிற்று வலிகளையும், கால் மூட்டு வியாதிகளையும், மன அழுத்தங்களையும் அறவே இல்லாமல் செய்யமுடியும்.

இச்சக்தி சிகிச்சையை சிரத்தையுடன் பயின்று, அதில் வல்லுனராகமுடியும் (Master Prana or Reiki healer). இப்பயிற்சியை ஒரு தவமென்று கூறலாம். இது பற்றிய விசேட பயிற்சியையும், அங்கீகாரத்தையும், இப்பயிற்சி முறைகளில் அனுபவமும் அங்கீகாரமும் பெற்ற ஒரு குருவின் மூலம் நிறைவாகப் பெறமுடியும். குருவென்பவர் நம்மில் பலர் நினைப்பதுபோல் எம்மனதிலும் உடலிலும் ஒரு கிளர்ச்சியை, மனமகிழ்ச்சியை, அவர் ஆற்றும் அதிசயங்களாலும், பேச்சு வன்மையினாலும், ஆன்மீக ஒளிர்வாலும் உருவாக்குபவர் அல்ல, எம்மிடையேயுள்ள சில அவசியமற்ற சுய திணிப்புக்களையும், மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து, புரியாத சில எல்லைகளுக்குள் கட்டுப்படாது, எதிர்ப்புகளை சமாளித்து, துணிவாக நாம் சில நல்ல காரியங்களை, சேவைகளைச் செய்யும் மன உணர்வுகளை வெளிக்கொண்டுவர உதவுவபரே குருவாகும், உணர்ச்சி வசமூட்டுவதும், கிளர்ச்சியை மனதில் தருவதும் குருவின் வேலையல்ல. மதத்தலைவர் வேறு; குரு வேறு. குறித்த இலக்கை அடைய வேண்டிய வழிகளை நாம் முன்னெடுத்துச் செல்லத் தேவையான உடல், உள வலிமையை நாம் உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துத் தருவதே நல்ல குருவின் இலக்கணம்.

எவருடைய அருகாமையில் இருக்கையில் அசௌகரியம் இருந்தாலும் அதனை மீற முடியாமல் நாம் இருப்போமோ, அவரே எம்மை நல்வழிப்படுத்தும் குருவாகும். அத்தகைய குருவின் மூலம் இந்த அரிய பிராண சக்தி சிகிச்சை முறை அதனை பயிலுபவரிடம் பரவுமானால் அதன் வலிமை நோய்களையும், மன உளைச்சல்களையும், உடல் வேதனைகளையும் தகர்க்கும் மருந்தாக அமையும். இவ்வாறு வழிவந்த பிராணா அல்லது ‘ரெக்கி’ பல பிரயோகங்களைக் கொண்டது. இதனால் நீரில் சக்தியூட்டலாம், மருந்துகளை மேலும் வலிமையுள்ளதாக்கலாம்; தாவரங்களை காக்கலாம். பொருட்களில், மனிதர்களில், ஏனைய உயிரினங்களில் உள்ள தீயசக்திகளை அகற்றலாம். நேரில் இல்லாமல் தூரத்தில் உள்ளவர்களின் நோய்களை, உபாதைகளை, மன உளைச்சல்களை ரெக்கி அலைகள் (rays) மூலமாக குணப்படுத்தலாம். இந்த அரிய சக்தியானது, முதன்மையான இறை சக்தியின் வரப்பிரசாதமாகும்; இது எம்மை மட்டுமல்ல எம்மைச் சூழ்ந்தவர் வாழ்க்கையையும் செழுமைப்படுத்தும்.

ரெக்கி அல்லது பிராணா குருவிடமிருந்து சீடர்களுக்கு (students) உபதேச (oral) அங்கீகாரமாகவே பரிமாறப்படுகின்றது (attunement). நாம் ஒவ்வொருவரும், இரட்டை மூலக்கூறுகளின் (RNA/DNA) சேர்க்கையினால் உருவாகிறோம். இவ் ஒவ்வொரு மூலகமும், ஏறு, இறங்கு முகமான அண்ட சராசர (பிரபஞ்ச) உயிர் விசையின் தோற்றமாகும். நாம் இப்பிரபஞ்ச உயிர் விசையை எமக்கு உதவுமாறு வேண்டி, நாம் அச்சக்தியின் ஓட்டத்திற்கு ஒரு கருவி அல்லது ஊடகமாகி, இந்த அரிய பிராணாவை மற்றைய உயிர்களுக்கோ, ஊடகங்களுக்கோ வழங்கி அவற்றைச் சீர்ப்படுத்தலாம்.

இந்த பிராணா சிகிச்சையை ஆரம்பிக்கு முன்னர், எம்மை நடுநிலைப் படுத்தி, எம்மில் சக்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு மிகவும் வலிமையான ஒலிகளை நாம் எம் உதவிக்கு உச்சரிக்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓம் (OM), குணகு (Hunah Ku) பயன்படுத்தலாம்.

OM – ஓம் என்பது அண்டமயமான தோற்றம் அல்லது படைப்பின் ஒளியாகும் (universal sound of creation). ஓம் என்பது எல்லா மந்திரங்களின் மூலமாகும், அல்லது தாயாகும். ஓம் என்பது அல்பா (Alpha) – ஒமேகா (Omega), அதாவது தோற்றமும் அதுவே! முடிவும் அதுவே!

உலக சமூகத்தில் முதன்மையான இறைவன் அல்லது படைப்பாளிக்கு (creator) பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில, கடவுள், அல்லா, புத்தா என்பவையாகும். எல்லா பெயர்களும் ‘ஆ’ என்னும் ஒரேயொரு ஒலியை பொதுவாகக் கொண்டுள்ளன.

பிராணா எம் அகத்தில் இருந்து உருவானது, எவ்வாறு ஒரு மனிதனின் நிழலும் அவன் கூட சேர்ந்து இருக்கிறதோ, அது போல இந்த பிராணாவும் (பிராண சக்தி) எம்மிடமே – எம் அகத்தில் கலந்துள்ளது. எண்ணத்தின் பிரதிபலிப்பாக இது எம்முடலில் புகுந்துள்ளது; பிரஸ்னா உபநிடதம் இவ்வுண்மையை கூறுகின்றது.

இப்பிராண சக்தியைக் கொண்டு சிகிச்சை அளிக்கையில் முதல் தடவை, சிகிச்சையின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாத சந்தர்ப்பங்களும் உண்டு. சில வேளைகளில் முதல் சிகிச்சையின் போது நோ அல்லது நோய் அதிகமாகத் தோற்றும். இது அங்கு, நோய் ஏற்கனவே உள்ளதென்பதும், இந்த நோ அதில் பிராணாவினால் ஏற்படும் மாற்றம் காரணமாகவே ஏற்படும், புதிய விளைவு என்றும் தான் கொள்ளல் வேண்டும்; ஆகவே இது நல்ல அறிகுறியாகும். இரண்டாவது தடவை பிராண சிகிச்சையின் போதும், சில நோய்கள் தீரும் பலன் திருப்திகரமாக இராது போகலாம். மூன்றாவது அல்லது அதன் பின்னுள்ள சிகிச்சைகளின் போது திடீரென மறைந்து விடச் சாத்தியம் உண்டு. இவ்வகைய சந்தர்ப்பங்கள், அதன் பின் சாதாரண வைத்திய பரிசோதனைகளின் போது நிரூபிக்கப்படுகின்றன (medical scanning or checkup). இதன் பலனாக உங்கள் வாழ்க்கையே மாறியதாக உணர்வீர்கள்.

பிராணாவுடன் வேலை செய்வது ஓர் உண்மையான அன்பு மயமே! இந்த தூய சக்தியில் ஒரு மாயம் எதுவெனில் அது மிகவும் அழகானது, அதிசயமானது. இதன் சக்தியை, அதன் பலனை விவரிக்க முடியாது. இதனை ஒரு குருவிடமிருந்து அறிந்து கொள்கையில், வாய் பேச முடியாத, கண்ணில் நீர் ததும்பும் நிலையை எவரும் அடையலாம், அவ்வளவு அழகானது – இந்த பிராணா என்னும் பயிற்சி.

எமக்கு வரும் முதுகு (பின்புற விலா) வலிகள், இடுப்பு நோவுகள், மூட்டு வலிகள் என்பன பலவருடங்களாக எமது உடல் கூறுகள் வளர்த்துக் கொண்ட பழக்கவழக்கங்களும், எமது எண்ணங்களினதும் பிரதிபலிப்புகளே ஆகும். பொதுவாக எமது வாழ்க்கைமுறை அல்லது பழக்கவழக்கங்களில் சில நல்லவை, சில கூடாதவை. எம்மிடையே அடிக்கடி வரும் பதட்டங்கள் இத்தகைய உடல் சம்பந்தமான உபாதைகளாலும், பிரச்சனைகளாலுமே உருவாகின்றன . இத்தகைய பதட்டங்களை தக்க வைத்துக் கொள்ளும் எமது பழக்கமே தீய விளைவுகளை, உடல் மனரீதியாக உருவாக்குகின்றன.

பிராணாவை கூடுலதாக எமது உடலில் கட்டுப்படுத்தி வைக்கையில் அதுவும் தீய விளைவுகளை உண்டாக்குகின்றது. பிராண சிகிச்சையின் மூலமாக இந்த உடல் அங்கங்களில் அதிகமான பிராணாவினால் உண்டாகும் அடைப்புகளை நீக்கலாம். இதனை சுத்தப்படுத்தல் அல்லது தூய்மைப்படுத்தல் (cleansing) என்று சொல்வார்கள். அதிக பிராணாவை எமது உடற்கூறுகளில் இருந்து அகற்றி, பிராணா குறைந்த இடங்களுக்குத் தேவையான பிராணாவை வழங்கி எமக்கு நாமே முறையான பயிற்சிக்குப் பின்னர் சுய சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

இந்த பிராண வைத்தியம் அல்லது சிகிச்சை நோய்களை நீக்கும் அல்லது நிவாரணம் அளிக்கும் ஓர் அதிசயமா? இல்லை; இது ஓர் எளிய யோகமுறை; பல ஆயிரம் வருடங்களின் முன்னமே அறியப்பட்டு வழி வழியாக வழக்கத்தில் வந்தது. இது உடலின் உயிர்சக்தியை, பிராணாவினால் வலிவுறச் செய்து எல்லா உடல் அமைப்புகளையும், உறுப்புகளையும், சீரிய சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.

அன்புடன் சு சிறீநந்தகுமார், MComp, Master Reiki (I & II)

Email: sri.srinanthakumar@gmail.com

 

 

பிராணா என்றால் என்ன?

இந்த அதிசய விசை பிராணா என்பது என்ன? அது எவ்வாறு பல அதிசயங்களைச் செய்கின்றது? பல ஆயிரம் வருடங்களாக இது உலகளாவி உபயோகத்திலிருந்த போதும், நாம் தற்போது மட்டுமே இது பற்றிக் கேள்விப்படுகிறோம்; அதன் காரணம் என்ன? இது ஒரு விஞ்ஞான முறையா? இதனால் எதாவது பக்க விளைவுகள் உண்டா? இதனைப் பயில்வதற்கு எமக்கு எதாவது தனித்திறமை அல்லது வல்லமை வேண்டுமா? இதனை முறைப்படி பயில எவ்வளவு காலம் தேவை? எத்தகைய நோய்களை அல்லது தீராத வியாதிகளைத் தீர்க்க இது உதவலாம்? இவற்றிற்கான பதில்களை பின்வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம். இதன் ஆரம்பம் அல்லது அடி, யோகப்பயிற்சி வழி வந்ததே! Dr. Dand Frawly, தனது நூலில், கடவுள், யோகிகள், அரசர்கள் என்ற நூலில் இந்தியாவின் கலாச்சாரமே உலகில் பழமையானதாகலாம் என்று கூறுவதுடன், கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே எவ்வாறு பிராணாவை, போர்க்களங்களிலும், தியான நிலைகளிலும், சிகிச்சையின் போதும் பாவித்தார்கள் என்றும் விரிவாகக் கூறுகின்றார்.

இனி வரும் முதல் மூன்று அத்தியாயங்களிலும் , இதப் பிராண சக்தியின் தோற்றப்பாட்டையும், பிராணா வைத்தியம் பற்றியும், பின் வரும் இறுதி அத்தியாயங்கள் இச்சக்தியை சிகிச்சை முறைக்கு எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பது பற்றியும் தெளிவாகவும், விரிவாகவும் கூறும்.

இந்நூலில் விவரிக்கப்படுபவை, ஒரு கோடி மனிதர்களால், பல ஆயிரம் வருடங்களாகக் கடைப்பிடித்த முறைகளாகும். இம்முறைகள் சாதகமாக நல்ல பெறுபேறுகளைக் கொடுத்தால் தான் இன்றும் இந்தச் சிகிச்சை முறை நின்று பயன் தருகின்றது. சக்திமுறை வைத்தியமுறையில் பல விதம் இருந்தாலும், சில தனித்தன்மையான நன்மைகள் அல்லது பலன்கள் யோகா பிராணா சிகிச்சைக்கு மட்டுமே உண்டு.

ஆன்மிகம் என்பது ஒன்றும் பெரிதல்ல. இது நிய மனதின் (pure consciousness) விளையாட்டை உணர்ந்து கொள்வதுதான். அதாவது எமது தவறுகள் பற்றியதை அறிந்துக் கொள்வதற்காக அதன் தோற்றநிலை அல்லது உற்பத்தியை அறிந்துக் கொள்வதேயாகும், அல்லது தேடிக் கண்டுப்பிடிப்பதேயாகும் – ஸ்ரீ நிசங்கதாத்தா மகாராஜ்.

பிராணா எல்லா உறுப்புகளிலும் (organs) உறைந்து, உடலின் எல்லாப்பாகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது பிராணா என்பது பிரபஞ்சத்தை படைப்பதாகவும், காப்பதாகவும், அளிப்பதாகவும், போற்றி வணங்கப்படுகின்றது. பிராணாவே சூரியனாகவும், மழையாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், உலகம் முழுவதையும், சொர்க்கத்தையும், நரகத்தையும் கட்டுபடுத்தும் விசையாக விளங்குகின்றது. பிராணாவே எல்லாவற்றையும் ஆளும் தோற்றமாகவும், எல்லா உயிர்களுக்கும் கடவுளாகவும் உள்ளது.

பிரணாவே பிரபஞ்சத்தின் வலிய சக்தியாகும். எல்லா ஜீவராசிகளும், இதனாலேயே வாழ்கின்றன. வேறுப்பட்ட மார்க்கங்கள் அல்லது நல்வழிமுறைகள் பிராணாவிற்கு வேறுபட்ட பல பெயர்களை வழங்கியுள்ளன. உயிர்ச்சக்தி, கை (Ki), ஒர்கோன் (orgone) மேலும் சக்தி (energy) என்று பல பெயர்கள். பிராணாவானது கூடுதலாக சுவாசத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது சுவாசமல்ல. பிராணாவானது சுவாசத்தில் நடைபயில்கிறது (rides on the breadth). ஆனால் அதிலிருந்தும் வேறுபட்டது. பிராணாவானது, சுவாசத்தின்போது உடலினுள்ளும் வெளியிலும் செல்கின்றது.

பிராணா என்பது ஒரு சமஸ்கிருத பெயராகும். இதன் அர்த்தம், ‘பிரா’ (pra) என்பது முன்னம் என்பதையும், ‘ணா’ (na) என்பது சுவாசத்தையும் குறிக்கின்றது. இது ஒரு தூய சக்தியாகும். இதற்கென ஒரு தனித் தன்மையுமில்லை. இது தனது தூய தனித் தன்மையை இழக்காது. எத்தகைய தன்மைகளையும் (qualities) எடுக்க வல்லது. இது நாம் எவ்வாறு ஒரு தனிமனிதனாக இருந்து கொண்டு, உடல் அணிகலன்களை அணிவதால் அதற்குரிய தோற்றத்துடன் (style) திகழ்கிறோமோ அது போன்றது.

இந்த பிராணாவானது, தியானத்தை மேற்கொள்வதற்கு உடலுறவு அல்லது பிராண சிகிச்சையை (healing) செயற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இது உடலிற்கு சக்தி ஊட்டுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் உரிய எண்ணச்சக்தியை அளிப்பதற்கும் மனிதனுக்கு உதவுகின்றது.

மனதில் உருவாகும் எண்ணத்தின் அசைவுகள், பிராணாவின் அசைவாலேயே உருவாகின்றன. பிராணாவின் அசைவானது, மனப்பிரதிபலிப்பின் எண்ண அசைவுளே!. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்த சுழற்சி (வட்டம்) போன்று தோன்றுகின்றன. ஏன் முழுமையான விஞ்ஞானம் ஒன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே, பிராணாவின் விளைவுகளைக் கொண்டு உருவாகியுள்ளது.

யோகமுறையானது, ஐந்து விதமான பிராண சக்தி எமது உடலில் இருப்பதாக கூறுகின்றது. அவையாவன பிராணா (Prana), அபண (Apana), சமண (Samana), உதன (Udana), அத்துடன் வயனா (Vyana) ஆகும். இது ஐந்து பிராணாக்களிலும், பிராணாவும் அபனாவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. பிராணாவானது இதயத்திலும், சிரசிலும் இருக்கையில், அபனாவானது முதுகு எலும்பின் (spine) அடிப்பாகத்தில் அமர்ந்துள்ளது. பொதுவாக பிராணாவும், அபனாவும் சுவாசத்தின் இரு துருவங்களாகும். பிராணாவானது சூரிய குடும்ப (solar) இயல்பையும் (அதாவது ஆண் தன்மையையும்), அபனாவானது சந்திரனின் (moon) இயல்பையும் (பெண்மைத்தன்மை) கொண்டுள்ளது.

பிராண சிகிச்சை முறையென்பது ஓர் ஆயுர்வேத அணுகுமுறையாகும். இது மீள்சக்தியூட்டதை மனிதனின் முழு உடலுக்கும் வழங்குகின்றது. அதாவது உடல், மனம், உணர்வு இதனால் பயனடைகின்றன.

உண்மையில் இச்சிகிச்சை முறை உருவாக்கப்பட்ட நோய்களுக்கு மட்டும் தீர்வாக உதவுவது அல்ல. அதன் மூலப்பிரச்சனைக்கு (fundamental issue) ஒரு நிரந்தரத்தீர்வாக, மிகவும் பயன்தரக்கூடியதாக அமைவதே பிராணசக்தி சிகிச்சையின் சிறப்புத்தன்மையாகும்.

 

பிராணாவிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு

பிராணா சுயமாகவே அசையவல்லது. அது போலவே மனமும்; மனமேன்பது எண்ணங்களின் உருவாக்கமேயாகும். இவ்வெண்ணங்கள் உயர்ந்தும், தாழ்ந்தும், உருவாகியும், மறைந்தும் தொழிற்படுகின்றன. மனமென்பது எண்ணங்களின் தொடர்கதை என்று கூடக் கூறலாம். மனமும், பிராணாவும் ஒரே தோற்றப்பாட்டின் இரு வேறு பரிமாணங்கள் அல்லது தன்மைகள் ஆகும்; இவை ஒன்றானவை; பிரிக்க முடியாதவை. பிரணாவானதுஅசைவின் உற்பத்தியாகும்; ஆனால் மனம் விவேகத்தின் உறைவிடமாகும். ஆகவே எல்லா தொழிற்பாடுகளுக்கும் (எண்ணங்கள் உட்பட) பிராணா தேவையாகும். உயிர்ச்சக்தி – பிரணாவைக் கட்டுப்படுதுவதன் மூலம் மனதையும் தேக்க நிலையில் வைக்கலாம். ஆனால் மனம், பிராணா தேக்கமுறின் மறைந்து இல்லாமல் போய்விடும். நிஜ மனத் தோற்றம் (consciousness) என்பது, உண்மை, அகம், அன்பு, இறைவன் என்பவற்றுக்கு ஒப்பானதாகும் மனதையும் , நிஜ மனத்தோற்றதையும் ஒன்றாகக் கொள்ளமுடியாது. மனத் தோற்றத்தை மனதில் தான் பார்க்கமுடியும்.

 

மனித உடலின் பல்வேறு கவசங்கள் (Layers)

தன்னை புரிந்துகொள்ளும் புரிந்துணர்வு என்பது உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், ஒருவர் தமது உடலில் பற்று வைத்து, இந்த உடல் தான் தன் தன்மை என்றும், இந்த உலகமானது தன்னைவிட்டு மற்றொன்று என்றும் பிழையாக கருதுகிறார் என்று ஸ்ரீரமண கீதா சொல்கிறது.

ஒரேயொரு மனித உடல் பல உடற் கவசங்களாக (layers), பல வடிவங்களில் வேறுபட்ட அலைவரிசையில் அதிர்ந்த வண்ணம் உள்ளது. மிகவும் உயர்ந்த அதிர்வுக்கவசங்கள் (படிவங்கள்) , குறைந்த அதிர்வுக்கவசங்களில் தாக்கத்தை உருவாக்கி இறுதியில் மிகக் குறைந்த அதிர்வுகளாக உடலை அடைகின்றது. முதலாவது உருவம் அல்லது தோற்றம் உடலாகும். இரண்டாவது உயிர்ச்சக்தி (ethene) அல்லது சக்திமயமானது. மூன்றாவது உணர்வு (emotion) சம்பந்தமானது (astral body). நான்காவது மனம் சம்பந்தப்பட்டது (mental). ஐந்தாவது, ஆன்மிகம் அல்லது நுண் அறிவு சம்பந்தமானது, ஆறாவது பிரபஞ்சமான தூய பரந்த அறிவு (pure intellectual) மயப்பட்டது. ஏழாவது பெயர் குறிப்பிடமுடியாத, பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. இந்த ஆறு உடல் கவசங்கள் அல்லது உருவ உறைகளுக்கும் காரணமானது இறை சக்தி அல்லது இயற்கைச் சக்தியென்று கூறலாம்.

 

எவ்வாறு பிராண சக்தி சிகிச்சை தொழிற்படுகின்றது

பிராணா சிகிச்சை முறை, சக்தியூட்டல் (energetic) வைத்தியம் என்று சொல்லப்படுகின்றது. வருத்தங்கள், நோய்கள், உடலின் எதிறிக் (ethiric) கவசத்தில் உள்ள நாடிகளில்தான் உருவாகின்றன. இவையே, நோவாகாவும், மன அழுத்தங்களாகவும் உருவாகிப்பின் நோயை உடலில் உருவாக்குகின்றன. இந்த பிராணவாயு சிகிச்சையைச் செய்பவர் இத்தகைய நோவுகளையும், மன அழுத்தங்களையும், வருத்தங்களையும், இரண்டாவது உடல் கவசமான எதிறிக் (ethiric) படிவத்தில் சுத்தமாக்கி (cleansing), பின் அதனை மீள் சக்தியூட்டுவதனால் (re-charging) முற்றாக நீக்கலாம். மேற்குறிப்பிட்ட நோய்கள் பெரும்பாலும் உணர்வு சம்பந்தப்பட்டவை ஆகும். ஆதலால் முதல் இரண்டு படிவங்களை அஸ்ரல் (astral), எதிறிக் (ethiric) என்பன கவனிக்கப்படவேண்டியவை. இதேபோல் மனம் (mental) சம்பந்தப்பட்ட குறைகளும், பிராண வைத்தியங்களால் ஒரு குறிப்பிட்ட காலச் சிகிச்சைக்குப்பின் அதன் தொடர்பான எல்லா உடல் கவசங்களுக்கும் தேவைப்பட்ட அளவில், பிராண சிகிச்சை செய்வதின் மூலம் முற்றாக நோய் நீங்க வாய்ப்பு உண்டு.

இந்த சிகிச்சை உடலில் (physical body) தேவையான நல்ல ஆரோக்கிய மாற்றத்தை அல்லது நிவாரணத்தை உண்டாக்க, ஓரளவு நேர இடைவெளியும், தகுந்த சிகிச்சையும் தேவைப்படும்.

உயிர்ச்சக்தி படிவம் தான் எமது தேகத்தின் முதல் கவசம் அல்லது உறை ஆகும். இங்கு தான் பிராணா நேரடியாகத் தொழிற்படுகின்றது. இதுதான் பிராணாவை உறிஞ்சிக்கொள்வதும், உடலின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிப்பதும் ஆகும். உயிர்ச்சக்தி உடல் கலசம் தான் எமது உண்மையான உயிர்ப்பாகும் (vitality). இதுவே பிராணா சிகிச்சைக்கு முற்றும் தேவையானது. இந்த உயிர்ச்சக்தி உடல் நாடிகளாலும், சக்கரங்களாலும் (chakaras) வழி நடத்தப்படுகின்றது. இந்த நாடிகளும், சக்கரங்களும், எதுவித அடைப்புக்களுக்கு உட்பட்டால், அதனால் உயிரின் சமநிலை குலைந்து நோய்கள் உருவாக காரணமாகலாம்.

உடலானது ஒரு சிக்கலான அமைப்பனதால், மேற்கூறிய குழப்பத்திற்கு உரிய அடிப்படை அல்லது மூல காரணத்தை அறிந்து கொள்வது பொதுவாகக் கடினமானதாகும்.

பிராணா சிகிச்சை முறை, உடல் சமநிலை குலைந்த அறிகுறியோ அல்லது முன்னேற்பாடோ இல்லாமல் ஆரம்பிக்கப்படுகின்றது. நோய்க் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது உறைவிடம், சிகிச்சைப் படிகளின் முதல் படியான கண்டுபிடித்தல் (detection) முறையாக எதிறிக் (ethiric) உடலை பரிசோதிப்பதின் (scanning) மூலமாகவே அறியப்படுகின்றது. உடலில் இப்பிரச்சனையுள்ள இடம், சுத்திகரிக்கப்பட்டு , பின் பிராணா மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையை மீண்டும் மீண்டும் செய்வதன்மூலம், பிராணா சிகிச்சை அக்குறிப்பிட்ட பகுதிக்கு அளிக்கப்பட்டு அப்பகுதி குணப்படுத்தப்படுகின்றது

இம்முறை எமது குடும்பத்தினருக்கு உண்டாகும் தடிமல், காய்ச்சல் (சுரம்), தலையிடி, தசைப்பிடிப்பு, உடல் உபாதை, சளி போன்ற பல தரப்பட்ட சாதாரண அன்றாட நோய்களுக்கும், நோவுகளுக்கும் நிவாரணமளிக்கும் எளியமுறையாகும். இது பல ஆபத்தான நோய்களையும், முறையான பயிற்சி முறையாலும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட அருளினாலும் (grace), பிராணாவின் உதவியுடன் தீர்க்கவல்லது. இதற்கு ஒரு தனித்திறமையும் தேவையில்லை. ஒழுங்கான உரிய பயிற்சியை நாள்தோறும் சிலை மணி நேரம் செய்வதால் தாமாகவே நோய் நிவாரணம் பெற முடியும். அல்லது ஒரு தகுதியான பிராண சிகிசையாளரின் மூலம் அதன் சிகிச்சைப்பயனை பெறமுடியும்.

பிராணா ஓர் உயிர்ச்சக்தி என்று சொல்லப்படுகின்றது . ஏனெனில் இது பிரபஞ்சமாயமாக, எல்லா உயிரினங்களாலும், எல்லாக்காலங்களிலும் பெறக்கூடியதாக உள்ளது. பிராணா இயற்கை நிலையில் ஏற்றம் அற்றது (neutral); சமநிலையானது. ஆனால் இதனால் எத்தகைய தன்மைகளையும் ஏற்று அதனைக் கொண்டு செல்லக் கூடியது, எல்லாவித சடங்குகள், சம்பிரதாயங்கள், மூர்த்திகளினால் மனத் தில் ஏற்படும் தாக்கம் யாவும் பிராணாவே! பல்வேறு குணாதிசயங்களை, தன்மைகளை தன்னகத்தே கொண்ட மனநிலையே பிராணாவாகும். சடங்குகளில் நமக்குள்ள அசாத்தியமான நம்பிக்கை இந்தப் பிராணாவின் பிரயோக வலிமையைக் கூட்டுகின்றது. இது அந்தச்சடங்குகளின் வலிமையினால் அல்ல… அச்சடங்குகளின் மீது நாம் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையேயாகும்.

இந்த அனுபவமே, எல்லா வித கலாச்சார, சமய, மந்திரீக சிகிச்சை என்பன, மனதில் மிக விரைவாக பிராணாவின் ஓட்டத்தை அதிகரிக்கச்செய்வதேயல்லாமல், வேறு ஏதும் இரகசியமான சக்தியினால் அல்ல. பிராணாதான் இந்த அதிசய-யாருமறிந்த சக்தி; இதைத் தவிர வேறு எவ்வித சக்திகளும் உளம் நிவாரணம் பெறத் தேவையானவை அல்ல. எல்லாவித இயற்கை வைத்தியங்களும், பிராணாவையே உபயோகப்படுத்துகின்றன. இது இதனைச் செய்பவரில் தங்குவதில்லை. இந்த பிரணாவின் உயர்சக்தியை உணர்ந்து சிகிச்சையளித்தால் இதன் முயற்சிப் பலன் (effectiveness) பல மடங்கு அதிகமாகும். இதனைச் செய்பவர் ஒவ்வொரு பிரச்னையையும் (case) பிரத்தியேகமாக அணுகிச் சிகிச்சையளித்தால் (அதாவது ஒரு பொதுவான சிகிச்சை முறையை எல்லா பிரச்சனைகளுக்கும் கடைப்பிடிக்காது), அதனால் ஏற்படும் பலன் அதிகமாகும். இச்சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட உடற் பாகங்களிலுள்ள மேலதிகமான, தேவையற்ற பிராணாவை அகற்றி, சுத்தம் செய்து, மீள் பிராணா சக்தியூட்டி, வியாதியஸ்தரை புதிய தூய அன்புமயமான பிராணாவின் மூலம் குணப்படுத்தலாம். இச்சக்தி மூலமான குணப்படுத்துதல் இலகுவானது, சிக்கலற்றது. இதனால் எத்தகைய பக்கவிளைவுகளும், கெடுதல்களும் இல்லை. இம்முறை நேரானது, உண்மையானது; இறைத்தன்மை வாய்ந்தது. இதை வர்த்தகமுறைப் படுத்தி (business) வியாபாரமாக்குவதே விரும்பப்படாததாகும்.

இச்சிகிச்சை முறையை எவ்வாறு செய்வது, இதனால் ஏற்படும் நற்பலன்கள் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் விரிவாக ஆராயலாம். தற்போது ‘குண்டலினி’ என்றால் என்ன? ‘சக்கரங்கள்’ என்றால் என்ன என்பது பற்றிச் சுருக்கமாக பார்க்கலாம்.

 

குண்டலினி சக்தி

குண்டலினியும், சக்கரங்களும், யோகா வழியை தேர்ந்தேடுத்து, பயிற்சி செய்கின்றவர்களுக்கே உரித்தாகும். நான் என்பதென்ன? (who am I) போன்று தன்னைத்தானே அறியும் (self enquiry) ஆராய்வில் ஈடுபடுவர்களுக்கு இந்த குண்டலினியை அறியும் சக்தி உரியது அல்ல.

  • ஸ்ரீ ரமண மகரிஸி –

குண்டலினி யோகா முறை மிகவும் கட்டுப்பாடுகள் கொண்ட ஓர் ஒழுங்கு முறையாகும். இது பிராணா சக்தியை சூச்சும நாடியில் (root chakara) இருந்து முடிச்சக்கரம் – சிரசு ஒளி வட்ட சக்கரத்திற்கு (crown chakara) அல்லது நாடிக்கு உயர்த்தும் பயிற்சியாகும். இதனைச் சரியான முறையில் செய்யாவிட்டால், மயக்க நிலை மேலும் உயிர் அபாயம் ஏற்பட இடமுண்டு. இதனைப் பயின்று, பயிற்சிப்பதற்கு ஒரு தகுந்த குருவும், வாழ்க்கை முறையில் ஒரு முற்றான நல்ல மாற்றமும் தேவை. இதற்கு சாத் துவீக (satvic) உணவு, வனவாசம், தியானம், உடற் பயிற்சி என்பனவே மிகவும் பலன் தரக்கூடியவை.

குண்டலினி யோகா, முதன்மையான பிராணாவை ஆளுவதுடன், சூச்சும நாடியிலிருந்து, இந்த பிராணாவை வயிற்றுக்கு மேல் தள்ளி, நாம் என்பதிலிருந்து எமக்கு விடுதலை தந்து நமது ஆழ்மனதுடன் (unconscious mind) ஐக்கியமாகும் நிலையைத் தருகின்றது.   ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் ஸ்ரீ இலட்சுமண சுவாமிகள் கூறியபடி, குண்டலினி முறை மிகவும் உன்னதநிலை என்று எல்லோராலும் கூறமுடியாது. ஏனெனில் இது மனமானது, இருதயத்துடன் ஐக்கியமாவதை இறுதி நிலையாகக் காட்டும் முறையைச் சொல்லவில்லை என்கிறார், இலட்சுமண சுவாமிகள்.

பிராணாவை ஏழாவது சக்கரத்திற்கு (sahasrara) உயர்த்துவதனால், யோகி நிலையை அடைந்தாலும் இது உயர்நிலை அல்ல என்கிறார். இது வேண்டுமானால் சித்திகளைக் (physical powers) கொடுக்கலாம். ஆனால் இது தம்மையறிதல் (self-realization) நிலைக்கு இதனைச் செய்பவரை கொண்டுவரமுடியாது. குண்டலினி யோகமுறை தெய்வீகத்தாயின் (divine mother) மேல்கொண்ட பக்தி சம்பந்தமானது அல்லாமல், பிராணாவின் அதிசய விளையாட்டுக்கள் அல்ல. முறையான அங்கீகாரம், ஆன்மீக வளர்ச்சி இல்லாமல், ஏனோ தானோ என்று குண்டலினி யோகாவை மேற்கொண்டால், பிராணாவாவின் தோற்றத்திலிருந்து, பிராணாவைப் பிரிப்பதுடன், அதன் பிரகாரமாக எம்மை அறியும் ஆற்றலை அறியக்கூடிய சாத்தியக்கூற்றையும் இழக்க வைக்கிறது.

 

சக்கரம் என்றால் என்ன?

சக்கரமென்பது சாதாரண தமிழில் சுழற்சி என்று சொல்லப்பட்டாலும், இங்கு இதன் முழு அர்த்தமானது, ‘ஒரு சுழலும் சக்தி’ (mass of energy). வழிவந்த அல்லது மரபுமுறையிலான யோகா பற்றிய குறிப்புகள் இந்தச்சக்கரங்களை ஒரு தாமரை மலரின் வெவ்வேறு இதழ்களாகவும், ஒவ்வொரு இதழினதும், ஒவ்வொரு இதழும் மனதோற்றத்தின் வெவ்வேறு நிலைகளையும் காட்டுவதாக சொல்கின்றன. பிராண சிகிச்சையின் போது ஒவ்வொரு சக்கரமும் பிராணாவின் விநியோக மையமாகும்.

சக்கரமானது, உடலளவில் அல்லது உணர்ச்சியளவில்   அல்லது இரண்டும் கலந்த நிலையில் அணுகப்படலாம். வழமையாக ஒருவர் இதனை சக்தி வலயத்தில் அல்லது ஆன்மீக வலயத்தில் கூட அணுகலாம்.

சக்கரமென்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடிகளின் குறுக்கீட்டின் மூலம்   தீர்மானிக்கப்படுகின்றது. எமது உடலில் 72,000 இற்கும் அதிகமான நாடிகள் உண்டு. அண்ணளவாக எவ்வளவு சக்கரங்கள் எமது உடலில் உள்ளதென்பதைப் பற்றிய ஒரு கணிப்பை அல்லது அனுமானத்தை மேற்கூறிய நாடிகளின் எண்ணிக்கை தருகின்றது.

யோகமுறையானது ஏழு முக்கிய சக்கரங்கள் உண்டென்று கூறுகின்றது. பல நாடிகளின் குறுக்கீட்டினால் முக்கிய சக்கரங்கள் உருவாகின்றன. இருபத்தொரு சிறிய சக்கரங்களும் உண்டு. உடலளவில் சக்கரமென்பது பிராணாவின் பாய்ச்சல் தரிப்பிடம் (pumping station) ஆகும். சக்கரம் பிராணாவை உடல் முழுவதிற்கும் நாடி மூலம் விநியோகிக்கின்றது. முதல் இரு உடற் கவசங்களுக்கும் (layers) இந்த வரைவிலக்கணம் மிகமுக்கியமானதாகும்.

இதன் தொழிற்ப்பாட்டை அறிவதன் மூலம் எமது உடலில் பிராண ஓட்டத்தை மிகவும் சிறப்பாக ஓடிச் சுழலவைத்து எமது தேக ஆரோக்கியத்தை மேலும் செம்மைப்படுத்தலாம்.

சக்கரங்களின் மூலம் நாம் ஆரோக்கிய உடல் நிலையைப் பெறலாம்.  ஹத யோகாவில் (Hatha yoga) ஆசனங்கள் (asanas) அல்லது உடல் நிலைகள் வேறுபட்ட நாடிகளிலும் சக்கரங்களிலும் பிராணாவின் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.  இதே போல் பிரணாயாம (pranayama) அதாவது மூச்சு கட்டுப்படுத்தல் – எமக்கு நல்ல உடல் உள ஆரோக்கிய நிலையையும் மனத்தைக் கட்டுப்படுத்தி  வழிப்படுத்தும் தன்மையையும் தருகின்றது.

இப்பிரணாயாம நாமத்தை சரியான முறையில்  செய்வோமாகில் இது பிராணாவை உடல் முழுவதும் வியாபித்து உலவச் செய்யும் வலிமை உடையது.

 

பிராண சக்தி சிகிச்சையும் அனுபவங்களும்

நான் முதன்முதலில்  ரேக்கியில் அதாவது உயிர் சக்தி பிராணா சிகிச்சை முறையில் நாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டது  சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே.  அதன் முன்னர், பிராணா, யோகா நிவாரணத்தின் ரகசியங்கள், அதன் செயல் முறை பற்றிய இந்திய ‘ரெக்கி’ அல்லது ‘பிராணா’ சிகிச்சை குருமார்கள் (masters) எழுதிய புத்தகங்களை படித்துள்ளேன்.  ஆனால் அவற்றின் கொள்கை   (theory) சம்பந்தமான அறிவைப் பெற்றுக்கொண்டேனே தவிர அதன் செயல் முறை பயிற்சிகளையோ, அதன் அனுபவத்தையோ பெறும்  வாய்ப்பு அன்று கிடைக்கவில்லை.

முதன் முதலாக இதன் செயல் முறை பலனை ஒரு ஆங்கிலேய குருவிடம் தான் கற்றேன்.  அவர் பல வருடங்களாக பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனது குருவிடமிருந்து இந்த நோய் தீர்க்கும் அற்புத பயிற்சியினை பெற்று இதனைக் கற்பிப்பதற்கும், நடை முறையில் சேவையாக இதனைப்   பயன் படுத்துவதற்கும் அவரின் குருவால் அனுக்கிரகிக்கப்பட்டவர் ஆவர்; அங்கீகரிக்கப்பட்டவராவர்.

இவரின் வீட்டில் வார விடுமுறைகளில் பத்துப் பதினைந்து பேர் கூடி இச்சிகிச்சையின் தன்மைகளையும் இதில் பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வோம்.  இதில் பலர் பிற நாடுகளிலிருந்து இங்கு சமீபத்தில் குடியேறியவர்கள்.  அவர்கள் நாட்டில் இதன் பிரயோக முறை சற்று வேறுபட்டதாக இருந்தாலும் அவர்கள் எல்லோருடையதும்  பொது அனுபவம் அல்லது அடைந்த பலன் ஒன்றாகவே இருந்தது.  இந்த சிகிச்சை ஓர் அகில உலக ரீதியான சக்தி முறையாகவே எனக்குத் தோன்றியது.  சிறு வயதிலிருந்தே எமக்கு மேலே ஒரு சக்தி உள்ளதென்று திடமான நம்பிக்கையும், பின் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடும் இருந்ததால் என்னை இந்த சிகிச்சை முறை, இது ஒரு சேவையாக உபயோகப்படுவதாலும், அதே நேரத்தில் எம்மை நாமே ஆன்மீகத்தில் உயர்த்திக்கொள்ள ஒரு சாதனமாகவும் பயன்பட்டதால்,  தொடர்ந்து இதற்குரிய முறையான பயிற்சியை அக்குருவின்  கீழும் (guidance),  ஒத்த மாணவர்களின் அனுபவத்தை பகிர்வதாலும் நிறைவாகப் பெற்று குருவினால் இதனைப் பயன்படுத்தும் அனுக்கிரகத்தையும், அங்கீகாரத்தையும் பெற்ற சீடர்களாகிய நாம், எம்மிடையே இதன் சக்தியைப் பரீட்சித்து, அதனால் எம்மில் நாமே ஒரு தன்னம்பிக்கையை வளர்த்து, முயன்றால் எம்மால் இதில் பூரண தகுதி அடைய முடியுமென்ற ஒரு திட சங்கல்பத்தையும் (சிலர்) எடுத்து இச்செயல் முறையை முதலில் எம்மிடையே பகிர்ந்து, அதன் பலன்களின் தரத்தை அறிந்து, அதன்படி முன்னோக்கி அடியெடுத்து வைத்தோம்.

பல தடவை இச்சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் இடங்களுக்கு இருவராகவோ அல்லது ஒரு குழுவாகவோ சென்று, ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட நிவாரணம் தேவைப்பட்ட ஒருவரின் வெவ்வேறு  உடற் கூறுகளுக்கு, ஒரே சமயத்தில் சக்தியூட்டி தற்காலிக அல்லது நிரந்தரமான உடல் வேதனைகள், பிரச்சனைகள், மற்றும் நோய்களைத் தீர்க்க உதவினோம்.  எம்மில் சிலர் தாம் தனியே இந்த சிகிச்சை செய்வதற்கு போதிய தன்னம்பிக்கையும் (confidence) இறை அருளும் (God’s grace), பயிற்சியும் (training) போதாததால், இதில் வல்லமை உள்ளவர்களுடன் சேர்ந்து, இச்சிகிச்சையில் உதவுவார்கள்.  பொதுவாக உப சக்கரங்களில் (கால், கை, காது) ஏற்படும் சாதாரண நோவுகளையும், பிடிப்புக்களையும், சிறு காயங்களையும் இவர்களின் சிகிச்சையினால் போக்கிவிடக் கூடியதாக இருக்கும்.

ஆனால் சற்று பெரிய வியாதிகளான, இடுப்பு வலிகள் (disk pain),  தலைக் குத்தல்கள்   (head ache), குடல் உபாதை (ulcer) ,  நெஞ்சு எரிச்சல் (heart burn) , தோல் வியாதிகள், கால் வீக்கங்கள் போன்றவை இச்சிகிச்சையில் மிக  அனுபவப்பட்டவர்களாலும், குருவின் பூரண அங்கீகாரமும் அனுக்கிரகமும் பெற்றவர்களாலேயே முற்றாக குணப்படுத்த முடியும்.  இதனைத் தொடர்ந்து செய்யும் முறையான பயிற்சியினாலும்,  பிரணாயாம யோக சித்திகளாலும், இறை அருளாலும் (God’s grace) ஆற்றல் பெற்று குணப்படுத்தலில் வெற்றி கண்டுள்ளார்கள்.  மிகவும் கொடிய வியாதிகளான  புற்று நோய், எயிட்ஸ் (Aids), இருதயக் கோளாறுகள், ஆர்திரெட்டிஸ், மூளை வருத்தம் (mental illness) போன்றவைகூட இதனால் எளிதில் பாதிக்கப்பட்டவரைவிட்டு, முற்றாக மறைந்து போன அனுபவங்களை பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.  இதில் சில சம்பவங்களை என் அனுபவத்திலும் நான் கண்டதுண்டு.

இந்த அனுபவங்களையும், இதனால் விளைந்த மன மகிழ்ச்சியையும், சில மனத்தளர்வுகளையும், இந்த பயிற்சியினை, சேவையை சரியாக கையாளாவிட்டால் வரும் தீய விளைவுகளையும், இங்கு கூறினால் மட்டுமே, சிலரது இந்த சக்தி சிகிச்சை முறை பற்றிய பிழையான அறிவை, அல்லது பிழையான பிரச்சாரத்தை நாம் புரிந்து, இதன் உயரிய நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

இச்சிகிச்சையளிக்குமுன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல்  சிகிச்சையின்போது தெரிவித்தல் வேண்டும்.  இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.  சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன.  இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும்.  அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.

முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும்.  இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.  அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும்  பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற  பிராணாவை  நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.

இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம்  இச்சிகிச்சையின்போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.  மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக  இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம்  தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால்  இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது; இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.

சிலர்  இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.  இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப்பெறாததாலும், அல்லது  இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி  இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.

ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல்  இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.  அடுத்து  இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.    இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவதுபோல் இப்பிராண சிகிச்சையின்போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா?

ஒருமுறை  இச்சிகிச்சையை நான் எனக்கு வேண்டிய, மிகவும் நெருங்கிய உறவினருக்குச் செய்கையில், அவரின் இந்த சிகிச்சை பற்றிய தப்பான அபிப்பிராயம் சிகிச்சையின்போது அவரின் ஒத்துழைப்பின்மையில் தெரிய வந்தது.  அவர் தனக்கு வசதியான முறையில் சிகிச்சையளிக்க வேண்டிக்கொண்ட போதும் அவரின் எண்ணங்கள் வேறு பிறவிடயங்களில் கவனமாக இருந்ததாலும், என்னால் பூரணமாக சிகிச்சை அவருக்கு அளிக்க முடியவில்லை.  அவரது நோக்கம், தான் உடனடியாக குணமாக வேண்டுமென்றும் தனக்கு ஒரு விதமான தற்காலிக வேதனைகளும் சிகிச்சையின் போது உண்டாகக் கூடாது என்றும்  குறித்த நேரத்தில் சிகிச்சையை முடித்துவிட வேண்டுமென்றும்  நிபந்தனைகளுடன் கூடியதாகவே இருந்தது.  இதன் விளைவாக அவரால் போதிய நிவாரணத்தைப் பெற முடியவில்லை.  அத்துடன் முதல் தரத்திலேயே எல்லாம் குணமாகிவிடும் என்றும் இதனால் தற்காலிகமாக ஏற்படும்   சகிக்ககூடிய நோவுகள் (pain) ஏற்படாது என்றும் திட்டமிட்டுக் கூறமுடியாது.

பொதுவாக ஒரு ஆங்கில மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போதும், ஒரே தரத்தில் தரப்பட்ட மருந்து அந்த நோயாளியைக் குணப்படுத்துவதில்லை. மேலும், அம்மருந்தை ஒழுங்காக வைத்தியர் சொன்னபடி உட்கொள்வதாலேயே அதிக பலனைப் பெறமுடியும். கூடிய, அல்லது குறைந்த அளவில் அம்மருந்தை ஒழுங்கு தவறி உபயோகித்தால், சிலவேளை நோய் அதிகமாவதையும் கண்டுள்ளோம். இது மருத்துவரின், அல்லது மருந்தின் பிழையல்ல. இதேபோல், ஒரு அறுவைச் சிகிச்சையின்போது அதற்கான மயக்க மருந்துகளை உபயோகிக்காவிட்டால், அதனால் வலியையும், வேதனையையும் சந்திக்கவேண்டிவரும். அல்லது, அந்த மயக்க மருந்துகளின் தாக்கம் குறைந்துகொண்டு போகும்போது வலி தெரிய ஆரம்பிக்கும்.

இதனால், ஒரு வைத்தியர் ஒரு உடல் நோயை அகற்றி ஆரோக்கியம்தர செய்த செயலை, அல்லது சேவையை, நாம் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறோமா? இல்லை.

இச்சிகிச்சையின் போதும், சாதாரண மேற்கத்திய சிகிச்சையைப் போல், ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும், தனியாகவோ, குழுக்களாகவோ சிகிச்சையளிப்பது வழக்கம். குழுவாகச் செய்கையில் பிராணா வேறுபட்ட பலரின் உடலினுடாக சிகிச்சை பெறுபவருக்கு கடத்தப்படுகிறது. இதனைச் செய்யும் ஒவ்வொருவரின் தூய எண்ணத்திலும், சிகிச்சைத்தன்மையிலும் பெறப்படும் மொத்த விளைவே பலனாக இருக்கும்.

சிலவேளை இவை மிகக் கூடிய பலனையும், அல்லது மிகக் குறைந்த பலனையும், இக்குழுவில் உள்ள சிகிச்சை அளிப்போரின் பயிற்சியிலும், நோக்கத்திலும், தாம் ஒரு கருவியேயன்றி, எல்லாம் பிராண சக்தியின் தொழிற்பாடே என்று நம்பும், நம்பிக்கையின் ஒட்டு மொத்த விளைவிலுமே தங்கியுள்ளது.

ஒரு பொழுது ஒரு பெண்மணி திருமணம் புரிந்து, சிலகாலத்திற்கு பின்னர் கருத்தரிக்கும் போது, ஆரம்பத்திலேயே கரு வளர்வது தடைப்பட்டு வந்தது. கர்ப்பப்பையில் கல்லிருப்பதாகவும், அதனை ஆங்கில வைத்தியர்கள் திடமாக நிச்சயித்து, கரு தங்காத காரணத்தைக் கூறமுடியாதிருந்ததாலும், அவர் கணவருடன் இந்தியா சென்று அதற்கான சிகிச்சைகளை ஆயுர்வேத வைத்திய முறையில் மேற்கொண்டார். இவர் பிராண சிகிச்சையில், ரெக்கி (Reiki) முறையைக் கற்று பயிற்சியும் பெற்றவர். சுய (தனது) நிவாரணத்திற்கு இச்சேவையை பயன்படுத்துவது குறைவு. சிலருக்கு, பலவேளை, அதன் பயன் கிடைப்பது இல்லை. அதனால், இவரால், தன்னைத்தானே குணப்படுத்தவும் முடியவில்லை. மேற்கத்திய, மற்றும் கீழைத்தேய ஆயுர்வேத வைத்திய முறைகளும் இரண்டு மூன்று வருடங்களாக பலனளிக்கவில்லை. இப்பெண்மணியும் எமது பிராண சிகிச்சை குழுவில் ஒருவராதலால், அவர் குடும்பத்தவர் அனுமதியுடனும், கணவரின் வேண்டுகோளின்படியும், அப்பெண்மணியின் விருப்பப்படியும், இப்பிராணா சிகிச்சையை சிலமுறை செய்யும் நிலை உண்டாகியது. எனது நம்பிக்கையும், எல்லாம் கடந்த ஒரு சக்தியின் துணையும், அவரிடம் நல்ல மாற்றத்தை உண்டாக்கி, வைத்தியர்களால் கூறப்பட்ட அந்த கர்பப்பையில் உள்ள கற்கள் கரைந்து போயின. இதனால், அவர் பூரண கருத்தரிக்கும் சாத்தியத்தைப்பெற்று அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அவருக்கு, இரண்டாவது குழந்தை பிறந்தபோது இத்தகைய பிரச்சனைகள் முற்றாக அகன்று விட்டன.

ஆங்கில மருத்துவ முறைப்படி, பரிசோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகள் பிறக்க வைத்தியர்கள் பெண்களுக்கு சிகிச்சை, பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துகையில், கவலைப்பட்டு கதை கட்டாத சிலர், இந்த இறை அருளால் சில சிக்கல்கள் நீங்கி, கருவுற்று பெண் தாயாகும்போது மட்டும், சந்தேகக் கண்ணோடு பார்க்கும், அல்லது இந்த சிகிச்சை முறைகளை தப்பானதாகத் தர்க்கிக்கும் வினோதம் இந்திய வழி சமூகத்தவரிடையேதான் கூடுதலாக உண்டு என்பதை அறியும்போது எவ்வாறு இச்சிகிச்சைமுறை ரெக்கி (Reiki) எனும் பெயரில் மேலை நாட்டவரை கவர்ந்தது என்பது, அவர்களில் பலர் கொண்டுள்ள ‘உயர்வாகத் மதிப்பிடல்’ (high self-esteem) தான் காரணமோ தெரியவில்லை. மேலும் சூழலை அறிந்து அதன் பிரகாரம் தம் வாழ்க்கையை உணர்தல் (social awareness) கூட அவர்கள் இச்சிகிச்சையை வரவேற்பதின் காரணமாகவும் அமையலாம்.

சிலவேளை இதனைச் செய்பவர்கள் அச்சிகிச்சை முடிந்தபின் தம்மை சுத்திகரித்தல் செய்யாவிடில் பாரதூரமான விளைவுகளும் ஏற்படச் சாத்தியமுண்டு. இது சிகிச்சை பெறுபவரின் குறிப்பிட்ட சில உடல் கவசங்களில் (sheath) உள்ள துர் சக்திகளின் (இவற்றைத்தான் துர் தேவதைகள் என்பர்) எதிர்த் தாக்கத்தால் உண்டாகலாம். சிகிச்சை பெறுபவரின் நோய்களைக் குணப்படுத்த முடியாமல் தடுக்கும் சில சக்திகள் (இவற்றைத்தான் தீய ஆவி என்பர்) இயற்கையில் உண்டு. அவை தமது தாக்கத்தை சிலவேளை இதனைச் செய்பவர் போதிய தன்னம்பிக்கை (confidence), உயர்வாக தன்னையறிதல் (high self-esteem), இறையன்பு (Prema), இறையருள் (God’s grace) இல்லாவிடில், அத்தீய சக்திகளால் தற்காலிக பாதிப்புகளான, கணப்பொழுது மயக்கத்தை (dizziness) அல்லது உறங்கு நிலை, சோர்வு போன்றவைக்கு ஆளாகலாம். இதனால் சில விபத்துக்கள் கூட செய்பவர்களுக்கு நடைபெற வாய்ப்புண்டு. இதனால், உடம்பில் சில நாட்களுக்கு சக்தி குறைவாகவும் தென்படலாம். இவற்றையும் துணிந்து ஏற்று ஒருவர் சிகிச்சையை மனித நேயத்துடன் பிறருக்கு செய்கையில், அதனைப் பலர் வரவேற்பதே சமுதாய முன்னேற்றதிற்கு உகந்ததாகும்.

சுமார் ஆறு ஏழு வருடங்களின் முன் ‘இடைவெளியை நிரப்பல்’ (filling the gap) எனும் ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வில் (பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில்) அதற்கு ஒத்தாசையாக மேள வாத்தியங்களைப் பாவித்த பின், அவற்றை அப்போது அண்மையில் வாங்கிய எனது புதிய வாகனத்தில் பின் பகுதியில் ஏற்றிக்கொண்டு நகரத்தில் நடைப்பெற்ற ஒரு கூட்டுப் பிரார்த்தனைக்குச் சென்றிருந்தேன். அப்பிரார்த்தனையின் பின் (bhajans), அந்த வாகனத்தில், ஒரு Reiki சிகிச்சைக்காக நகரின் வேறொரு பகுதிக்குச் சென்றிருந்தேன். நான் சந்திக்கச் சென்றிருந்த நபர் ‘Kinsiology’ சிகிச்சை முறையைச் செய்பவர். என்றாலும் அவருடைய இடுப்பு, பின்புறம், நோவுகள் பல காலமாக அவராலேயே மாற்ற முடியாமல் இருந்தது. இவர் ஒவ்வொரு நாளும் துரித நடை ஓர் அரை மணி நேரம் மேற்கொள்பவர். இவரது கின்சியோலொஜி (Kinsiology) சிகிச்சை அறையிலேயே, அதன் படுக்கையிலேயே Reiki சிகிச்சையை ஒரு அரைமணி நேரம் செய்தேன். பின்னர் அவரின் நண்பருக்கும் அவர் வேண்டுகோளின்படி இச்சிகிச்சையைச் செய்தேன். இருவரும் ஒன்றாக வசிக்கும் இளம் காதலர்கள். இச்சிகிச்சையின்பின், நேரம் 11.00 மணி இரவு ஆனதால் துரிதமாக, என்னை நானே சுத்தி செய்யாமல் (cleansing), கை, முகம் கழுவாமல் உடனடியாக எனது வாகனத்தில் ஏறி, தனிமையாக சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எனது வீடுநோக்கி சாதாரண வேகத்தில் வந்து கொண்டிருந்தேன். மழை சிறிது தூறலாக பெய்யத் தொடங்கியிருந்தது. எனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள வீதியொன்றில் வரும்போது, திடீரென்று இச்சம்பவம் நடந்தது.

திடீரென எனது வாகனம் மிக வேகமாக வீதியின் மறு கரைக்குச் சென்று, அங்கு தரித்து நின்ற ஒரு வாகனத்திற்கு சமாந்தரமாக (parallel) அதனைச் சேதப்படுத்தாமல் சென்று, வீதி ஓரத்தில் இருந்த மரத்தினில் நேரடியாக மோதி குத்துற நின்றது. திரி சங்கு சொர்க்கம் என்றால் என்ன என்பதை அப்போது அனுபவத்தில் கண்டுகொண்டேன். நான் இறந்து என்னை நானே மேலிருந்து பார்ப்பதான ஒரு உணர்வு. உடலில் உயிர் பிரிந்த தன்மை என்ன என்பதை நிதர்சனமாக கண்டு கொண்டேன். மறுகணம், காரின் முன்பகுதி புகைவதையும், எனது நெற்றி வாகனம் வழிநடத்தும் சக்கரத்தில் (steering wheel)   பலமாக மோதியதால், வாயுப்பை (air bag) உடைந்து கார் முழுவதும் புகைமண்டலம் பரவி இருப்பதையும் உணர்ந்து கொண்டு, சொர்க்கத்திலிருந்து, பூமிக்குத் தாவும் முகமாக, நிலைக்குத்தாக நின்ற காரின் முன் கதவை திறந்துக்கொண்டு வெளியே குதித்தேன்.

அப்போது அங்கு ஓடிவந்த ஒரு வெள்ளையர், என்னிடம் யாரோ ஒருவரின் கார் திடீரென வேகமாக வளைந்து, வளைந்து சென்றதென்றும், அதிலிருந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று இருட்டில் தனக்கு தெரியவில்லையென்றும், எனக்கு அதுபற்றித் தெரியுமா என்றும், என்னிடமே அச்சாலை ஓரத்தில் இருட்டில் என்னருகில் எகிறி நின்ற எனது வாகனத்தைக் கண்டுகொள்ளாமல் கலவரத்துடன் கேட்டார். நான் தான் அந்த ஆசாமி என்றும், அந்த வாகனமே இது என்றும் காட்டியபோது, அவர் என்னை ஒரு ஆவியேயென்று (spirit) என்று நினைத்தாரோ என்னவோ, உடனடியாக என்னை அதிசயமாகப் பார்த்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டிவிட்டார். அதன் பிறகு நடந்தவற்றை விவரிக்க இங்கு இடமில்லை. ஆனால் நான் ஒரு முறை இறந்து பிறந்ததாகவே உணர்ந்தேன். ஒரு கண மயக்கம் அல்லது சோர்வு, அல்லது நித்திரை, யாதோ ஒன்று என்னை வேகக்கருவியை (accelerator) அதிகப்படுத்தி வைத்து இந்நிகழ்வை உருவாக்கிவிட்டது. இது நான் என்னை சிகிச்சையின்பின், உடனடியாக சுத்திகிரிக்காதலாலும், அதனால் சிகிச்சை பெற்றலில் யாரோ ஒருவரின் உடற்கவசங்களில் ஆக்கிரமித்த ஒரு தீயசக்தி (bad angel) என்னைப் பற்றியதாலும், தொடர்ந்து சிறிதும் ஓய்வுபெறாமல், நான் காரில் புறப்பட்டதாலும், இது நடை பெற்றிருக்க வாய்ப்பு உண்டு என்று உணர்ந்து, இதன்பின் இச்சிகிச்சையின் முன்னும், பின்னும் தேவையான சுத்திகரிப்புகளையும், பிராண சக்தி ஏற்றங்களையும் (energy boosting) மறக்காமல் செய்து வருகின்றேன். மேலும் காரின் பின்புறம் இருந்த மேள, இசை வாத்தியங்களும் அதிலிருந்த சக்திகளும் கூட என்னை காப்பாற்றியிருக்கலாமென்று நினைத்ததுமுண்டு.

இச்சிகிச்சையில் முழு நம்பிக்கை வைத்து, அதைச் செய்பவரமிடமும் நம்பிக்கை வைத்து, எல்லாம் சக்தியின் அருளே என்று அச்சிகிச்சையின்போது ஆதி பராசக்தியையே மனக்கண்ணில் நிறுத்தி, பலன் பெற்ற ஒரு தாயையும் எனது அனுபவத்தில் கண்டேன். இவருக்கு இரு கால் மூட்டுக்களில் ஒன்று, மூட்டுக்கள் இலகுவாக கால் பகுதிகள் அசைவதற்கு இடம் கொடுக்கும் திராவகம் குறைந்ததால், நடக்கும் போது மிகவும் வலியும், அதனால் பல நாள் வேதனையையும் அனுபவித்து வந்தார். நடக்கும் போது மற்றைய காலிலேயே முழுப் பாரத்தையும் போடுவதால் அந்தக் காலும் அதற்கு வேலை அதிகமானதால் நோ கண்டது. இதற்காக ஆங்கில வைத்தியரின் மூலம், நோவுக்காக மருந்துகளை உட்கொள்வதுடன், மூட்டு மாற்றத்திற்கு (knee replacement) நாள் குறித்தாலும், அது பிற்போடப்பட்டதால் நோவில் தவித்தார். அப்பொழுது அவராகவே இச்சிகிச்சை முறையை முயன்று பார்க்க விருப்பம் தெரிவித்து, அதில் தனக்கு பூரண நம்பிக்கையும், சம்மதமும் உண்டென்று தெரிவித்ததால், அவர் வீட்டு சுவாமி அறையில் இதற்கான பிராண சிகிச்சை ஆரம்பமாயிற்று. சிகிச்சையின் முதற்படியாக ஆரம்பச் சடங்குகள் சில முறைப்படி செய்தபின், பிராணா சக்தியில் ஏற்ற இறக்கங்கள் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டது. அவர் அண்ணளவாக கூறிய இடங்களில், ஒரு வித சலசலப்பு, வெப்பம் காணப்பட்டது.

அவரினால் பலவித மாற்றங்கள் , சிரசுப் பகுதியில் பிராண சிகிச்சையின் போது காணப்பட்டதாகச் சொன்னார். முதலில் மூடிய கண்களுக்குள் அவர் கண்ட இளஞ்சிவப்பு தோற்றங்கள், பின் பசுஞ்சோலைகளாக மாறி ஒரு குளிர்மயமான அம்மன் தரிசன உணர்வை தந்ததாக சிகிச்சையின் போது என்னுடன் கதைத்துக் கொண்டு இருந்தபோது கூறினார். இவருடைய புண்பட்ட கால் மூட்டுக்கும் புண்படாத ஆனால், தன்னில் முழுச் சுமையேற்றியதால் தவித்துக் கொண்டிருந்த மற்றைய காலுக்கும் பிராண சிகிச்சை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு அளிக்கப்பட்டது. இதன்பின் மேலதிக பிராணா கால்களில் இருந்து அகற்றப்பட்டு அவ்விடங்களில் தேவையான அளவு பிராணா சில மந்திர குறிகள் (symbols) மூலம் பதிக்கப்பட்டது. இது ஏற்றப்பட்ட பிராணாவை சேமித்து வைப்பது; பின் அவரை சூழ உள்ள முதல் சில உடல் கவசங்கள் சுத்திகரிக்கப்பட்டு அவருக்கு போதிய நீர் வழங்கப்பட்டது.

இச்சிகிச்சையின் போது சிகிச்சை பெறுபவருக்கோ, செய்பவருக்கோ நீர்த் தாகம் ஏற்படும். இதனை அருந்தாவிடில் உடற் சோர்வும் சக்தியிழப்பும் சிறிது நேரத்திற்கு காணப்படும். இது உடலில் பிராணாவின் ஓட்டத்தினால் ஏற்படும் இயற்கை விளைவாகும். இதனால் எவ்வித உடற்பாதிப்புக்ளும் இல்லை. ஆனால் சிறிது மயக்கம் உண்டாகலாம்.

இச்சிகிச்சை சில வாரங்களுக்கு வாரம் ஒரு தடவையாக அண்ணளவாக ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்பட்டது. முதலிரு சிகிச்சையின் போதும், சிறிது நோ இருந்தாலும், காலை ஊன்றி சிரமமில்லாமல் நடக்கக்கூடியதாக இருந்ததாக கூறிய அம்மையார், பின்னைய சிகிச்சையின் பின்தான், மூட்டு அதிகம் சேதமுற்ற காலிலும் சிறிது பாரத்தை பகிர்ந்து நடப்பதாக கூறினார். பின்னர், மூட்டு அதிகம் சேதமுறாத கால் சுகமாகி வந்ததாகவும், வைத்திய வெட்டு சிகிச்சையின் பின் மூட்டு முற்றாகச் சேதமான காலும், பூரண சுகம் பெற்றதாகவும் கூறி, பிராண சிகிச்சையும், மேற்கத்திய சிகிச்சையும் சேர்ந்து தன்னைக் குணப்படுத்திப் பழையவாறு தான் பொதுச்சேவையில் துடியாட்டமாக ஈடுபட்டுவருவதாகவும், இந்த எண்பது வயது முதியவர் கூறினார். இது, இச்சிகிச்சை முறை எந்த ஆங்கில வைத்திய சிகிச்சையுடனும் ஒத்து, அச்சிகிச்சையினால் ஏற்படும் நற்பலனின் வேகத்தை கூட்டி, தரத்தையும் உயர்த்தும் என்று அனுபவரீதியாகக் கூறுகிறது.

இன்னொரு நிகழ்ச்சியும் இந்த கூட்டு சிகிச்சையின் பலனை எனக்கு ஞாபகம் ஊட்டுகின்றது. ஒரு முறை மெல்பேண் கோவிலொன்றில் சமயற்காரராக வேலை செய்யும் ஒருவருக்கு பல நாட்களாக குடல் எரிவு இருந்தது. இதனால் அவரால் சரியாகச் சாப்பிடமுடியவில்லை. அத்துடன் வேலை செய்யும்போதும் வேதனையை அனுபவித்தார். இதற்கு ஆங்கில மருந்துகள் நோயைக் தற்காலிகமாகக் குறைக்கும் வலி குறைப்பு மாத்திரைகள் (pain killer tablets) உட்கொண்டு வந்தார். இதனை அவர் எனக்குத் தெரிவித்தப்போது, அவருக்குச் சம்மதமானால் வீடு வரும்படியும், இதற்கு எம்மைக் கடந்த ஒரு கடவுளினதும், இயற்கை சக்தியிலும் நம்பிக்கை மட்டுமில்லாமல், என்னிலும் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்ட போது, இவர் இறைநம்பிக்கையுள்ளவராதராலும் பல நாட்கள் என்னை அறிந்திருந்ததாலும், சம்மதம் தெரிவித்து, இன்னொரு, கோவிலில் வதியும் நண்பருடன் வானில் (van) என் வீடு வந்தார். முறைப்படி ஓர் அறையில், அறையைக் சுத்திகரிப்புச் செய்து (cleansing) சந்தனக் குச்சிகள் கொளுத்தி, ‘ஓம்’ எனும் உலகமயமான பிராணா (prana) ஒலியுடன் சிகிச்சை ஆரம்பமானது. அவரின் உடலில் பிராணாவை பரிசோதித்த போது, நெஞ்சு வழியேயுள்ள உணவுக்குழாயில் சில சலசலப்பை உணர முடிந்தது. குறிப்பாக அப்பகுதியிலும், அதற்கு முன்னுள்ள சக்கரங்களில் இருந்து பிராணா சக்தியை அதற்கு பின்னால் வரும் சக்கரங்களுக்கு நகர்த்தி அவ்விடத்தில் போதிய பிராணாவைச் செலுத்தி ஓர் அரைமணி நேரம் சிகிச்சையளிக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வின் பின்னும், ஒரு லிட்டர் (litre) நீர் அருந்தியபின்னும், வானில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டது.

உடனடியாக வாகனத்தையோட்டினால், அதனால் சில பாதிப்புகளை அடைந்த எனது அனுபவம், மேலதிக பிராணாவில் இருந்தும், அவருடலை சுத்திகரிக்கச்செய்து, ஓய்வெடுத்த பின், மெதுவாக வேனில் அவரின் வதிவிடத்திக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். தனக்கு சிறிது நோ, உணவுக் குழாயில் முதலிரு நாட்களுக்கு இருந்ததாகவும் பின் இரு நாட்களில் அதிகமாகக் குறைந்து தன்னால் சாப்பிடக்கூடியதாகயுள்ளதாகவும் சொன்னார். அடுத்த கிழமையும் அவரை இரவில் வரவழைத்து இச்சிகிச்சை சிறிது கூடிய நேரம் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிக்கும், மெதுவாக அடிப்பாகத்திலிருந்து சிரசுவரையிலுள்ள எல்லா முக்கிய சக்கரங்களுக்கும், சில உப சக்கரங்களுக்கும் கொடுக்கப்பட்டது. இம்முறை அவர் மிகவும் சகஜ நிலையில் தனக்கு மனக்கண்களில் ஏற்படும் ஒளிமாற்றங்களையும் பிராணா உடலினுடாக பாய்கையில் ஏற்படும் ஊர்வது போன்ற பிராணா சக்தியின் இதமான அசைவையும், அவ்வப்போது சிகிச்சையின் போது தெரிவித்துக்கொண்டிருந்தார். இதன்பின் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போனது. தனக்கு பூரண சுகமென்றும், தன்னால் வழமைபோல் உணவைச் சிரமமின்றி உட்கொள்ளக் கூடியதாகவிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். தான் இச்சிகிச்சையின்போது சிறிதளவே வலிதடுப்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், ஒரு வைத்தியம் மற்றதுடன் ஒத்துப்போனதாகத் தான் உணர்ந்ததாகவும் கூறினார்.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து எனது ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவியும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவின் பூங்கா நகரமான (garden city) மெல்பேர்ணிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் சகோதரரின் மனைவியின் நண்பி வீட்டில் தங்கி இருந்தார்கள். பிள்ளைகளுக்கும் பிடித்தமான உணவு, ‘கடலோர தென்னைமரம்’ என்பதை நினைவு படுத்தும் ‘palm beach’ உணவுச்சாலையில் கிடைக்குமாதலால், மதிய உணவு அங்கு சென்று உட்கொள்வது என்று தீர்மானமாகியது. ஆனால் பத்து மணியளவில் வந்தவர்களின் மூத்த பெண்  குழந்தைக்கு (9 வயது) வயிற்றில் குத்து என்றும், அடிக்கடி சத்தி வருகிறதென்றும், அதனால் இந்த மதிய சாப்பாட்டு ஏற்பாட்டைத் தவிர்க்கும்படியும், தாம் எம் வீட்டிற்கு 12.00 மணியளவில் வந்து செல்வததாகவும் தாய் தொலைபேசியில் கூறினார். எமக்கு இது மிகவும் கவலையாக இருந்தது. பெண் பிள்ளையும் இருமுறை எம்வீட்டில் சத்தி எடுத்து மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் அவருக்கு உணவுச்சாலைக்கு சென்று விதவிதமான சாப்பாடுகள் சாப்பிட வேண்டுமென்றும், பால் ஐஸ் கிரீம் (milk shake) குடிக்கவேண்டுமென்ற ஆசையும் வெகுவாக இருந்தது.

அவரிடம் சிறிது நேரத்தின் பின் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேட்டேன். ‘ஆம் முழுமையாக’ என்றார். அவர் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா என்றும், அதனை என் மூலம் முயற்சிப்போமா என்று கேட்டேன். அவரின் கண்கள் மலர்ந்தன. நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமென்ற ஆசையும், தனக்கு உதவ ஒருவர் (uncle) முன்வந்துள்ளார் என்றும் அறிந்து உடனடியாக ‘ஓம்’ என்றார். அதற்கு நானும் ‘ஓம்’ என்ற பிராணக் கடவுளின் சிகிச்சை தான் இது என்று அவருக்கு தமிழில் கூறினேன். அவர் தகப்பன் அமெரிக்காவில் மருத்துவர். தாயார் வக்கீல். அவர்கள் இங்கு வருவதற்கு சில வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அவர்கள் வீட்டில் பல பக்திப்பாடல்கள் பாடி, கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளோம். இதனை அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார். அதில் அம்மன் மீதான, ‘வருவாய் வருவாய் வருவாய் அம்மா’ என்ற பாடல் அவருக்கு பிடித்திருக்கலாம். ஆகவே அம்மன் மீது நம்பிக்கை கொண்டு அவரை மனதில் நினைத்து, அம்மன் உருவத்தை மூடிய கண்களில் கண்டு கொண்டு சிறிது சோபாவில் படுத்திருங்கள் என்று கூறினேன். அவரும் உடனடியாகச் சம்மதித்தார். எமது வீட்டிலுருந்த பெரிய காமாட்சி அம்மன் ‘கட் அவுட்’ (cut out) ஓவியம் பின்புறமாக, சரஸ்வதி, பிள்ளையார் படங்களுடன் இருந்தது. தாயாரது அனுமதியுடனும், பிள்ளையின் அனுமதியுடனும் பிராணா சிகிச்சையை ஆரம்பித்தேன்.

அண்ணளவாக பதினைந்து நிமிடங்கள் குறிப்பாக வயிற்றுப் பகுதியில், இரண்டாம், மூன்றாம் சக்கரங்களில் இந்த சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் பொறுமையை தன் கண்ணில் தென்பட்ட ஒளி மாற்றங்களையும் உணர்வுகளையும் கூறிக் கொண்டிருந்தார். சிகிச்சை நிறைவு பெற்றதும் ஒரு கோப்பை நீரை அருந்தியபின் எம்முடன் கதைத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் உற்சாகமாக அவர் உடல்நிலை மாறியதை அவர் முகத்தில் தென்பட்ட தெளிவாலும், அவர் சிரித்து மகிழ்ந்ததையும் பார்த்தபோது தெரிந்துக் கொண்டேன். சில அரை மணிகளில் அவர் சகஜ நிலைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்து விடுவார் போல் இருந்தது. அவரின் இறை நம்பிக்கையும், அவர் என்மீது கொண்ட நம்பிக்கையும், தான் இன்று மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற நோக்கமும் , அவரைக் குணமாக்கி குறித்த இடத்தில அவர் விரும்பிய உணவுகளையும், ஐஸ் கிரீமையும் விரும்பிச் சாப்பிட முடிந்தது. அதன்பின் வயிற்று குளறுபடியோ, சத்தியோ வரவில்லை என்பதை அவர் அன்று ஆகாயக்கப்பலில் (plane) மெல்பேர்ணிலிருந்து சிட்னி சென்ற பின்னர் அறியக் கூடியதாயிருந்தது. இதில் மிக முக்கியமான மகிழ்ச்சியான விடயமெது எனில்,   ஏழு வருடங்களின் பின் சிறிது நாட்களுக்கு முன் எனது அதே ஒன்றுவிட்ட சகோதரருக்கு அவரையும், மனைவியையும் பிள்ளைகளையும் எம் வீட்டில் நடை பெற இருக்கும் எனது மகனின் கலியாண வீட்டுக்காக தொலைபேசியில் அழைத்தபோது, அப்பிள்ளை (தற்போது 16 வயது) திடீரென அவர் தகப்பனாரிடம், ‘அப்பா நீங்கள் டொக்டர் தானே! எப்படி அந்த அங்கிள் எனக்கு மருந்தில்லாமல் குணப்படுத்தினார். நான் மருந்து சாப்பிட்டு வயிற்றுக் குத்தும், சத்தியும் உடனே நிற்க வில்லையே’ என்றாராம். அதற்கு அவர், சில அரிய சக்திகள் மருந்துகளால் குணப்படுத்த முடியாததை மனிதர் மூலம் குணப்படுத்துவதை தானும் அனுபவத்தால் கண்டுள்ளதாகக் கூறி, அப்பிள்ளை 6-7 வருடங்களின் பின்னும், அந்த அனுபவத்தை ஞாபகம் வைத்து உரிய கேள்வியை, அறிவு முதிர்ந்த நிலையில் கேட்டதையெண்ணி தானும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

ஆனால் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் இந்த சிகிச்சையில் நம்பிக்கை குறைவாக கொண்டதாலும், இச்சிகிச்சை முறையை சந்தேகத்துடன் பார்ப்பதாலும், உடனடியாக வரும் சிறு நோவுகளைச் சமாளிக்கும், பொறுமையில்லாததாலும், தனக்குக் கிடைக்கக் கூடிய நிரந்தர நோய் நிவாரணத்தைத் தள்ளிப் போடுகிறார் என்பதை அறியும் போது சிறு பிள்ளைகளிடமும், வயோதிபர்களுக்கும் இருக்கும், இந்த நம்பிக்கை, இதனைச் செய்பவரின் மீது உள்ள மதிப்பு, நம்பிக்கை, ஏன் அதிகமான நடுத்தர வயதுள்ளவர்களிடம் குறைந்ததாக தென்படுகிறதென்பதைச் சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.

சிலருக்கு இச்சிகிச்சை முறை பெரிதாகப் பலன் அளிப்பதில்லை. ஆங்கில மருத்துவத்தில் ஒரே மருந்தானது வேறு வேறு வைத்தியர்களால் கொடுக்கப்பட்டாலும் அல்லது சிகிச்சை முறை பல வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரே விதமான பலன் கிடைப்பதில்லை. இதை கைராசி விசேடம் என்றும் சொல்வர். சிலர் வைத்தியரிடையே அனுபவம் வேறுபட்டது என்றும் கூறுவர். ஆனால் இச்சிகிச்சை முறையில் கைராசி மட்டுமல்லாமல், இறை அருள் (God’s grace), அத்துடன் சிகிச்சை பெறுவோரின் கர்ம பலனும், நிவாரண பலனில் முக்கிய இடம் வகிக்கின்றன.   சில வலிய (powerful) கர்மா சம்பந்தமான தீர்க்க முடியாத பல நோய்கள், பாதிப்புக்கள் சிகிச்சை பெறுபவரின் தற்போதைய மன மாற்றங்களிலும், அவரின் நற்செயலின் விளைவிலும் கூடத் தங்கி உள்ளது. சிகிச்சை அளிப்பவரின் பார்வையில் அவர்கள் மன மாற்றம் முற்றாக கர்மாவின் காரணம் இல்லாததாலும் சில நேரங்களில் உடனடியாக முற்றாக நோயை ஒழித்து விட முடியாது. இதே போல் தன் சுய நலனுக்காகவும், குடும்ப அங்கத்தவர்களின் நன்மைக்காகவும் நோய்களை இச்சிகிச்சை முறையில் அகற்ற முயல்கையில் உடனடியாக பரிகாரம் கிடைப்பதில்லை. இது வழி வந்த அனுபவமாகும். ஆனால் பல காலமாக இச்சேவையை பலருக்கு அளித்த பின் அவர் இச்சேவையைத் தொடர்ந்தும் செயல் படுத்த வேண்டிய ஒரு நல்ல நோக்கத்துக்காக தனக்கோ தன் நெருங்கிய குடும்ப அங்கத்தவருக்கோ சிகிச்சை அளிக்கையில் நல்ல பலனைப் பெற்றதை சரித்திரம் சொல்கின்றது.

அண்மைக்காலத்தில் ரமண மகரிஷியினால் இந்தியாவில் உபயோகிக்கப்பட்ட இப்பிராணா சிகிச்சை பலருக்கு அவர் அதை தன் அன்பு வளர்ப்பு பிராணியான பசுவுக்கோ தனக்கோ நோய் வந்த போது குணப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் அவராலே தன்னையோ தன் பசுவையோ அதிகம் உடல் ரீதியான விடுதலைக்குரியதாக்க விரும்பவில்லை என்பதும், அவரின் உலக வாழ்க்கை விடுதலையே அவருக்கு முக்கிய நோக்கமாக இருந்ததென்பதையும் உணரலாம். உலக கைங்கர்யங்களிலும் குடும்ப வாழ்விலும் ஈடுபாடு கொண்ட பல சிகிச்சையாளர்கள் இச்சிகிச்சை முறையை தம் சுய நலனுக்காக, பொது நலனில் தாம் கண்ட இன்பத்தில் தம் குறைகளை நோய்களை மறப்பதால் தமக்காக பாவித்ததில்லை. ஆனால் அவர்கள் தாம் பல காலம் வாழ்ந்து பிறருக்காக தம் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய நிலையில், உரிய காலத்தில் தமக்கும் இச்சிகிச்சை முறையை பயன்படுத்தப் வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதுவும் நாம் நம்பியோ நம்பாமலோ அவர்கள் செய்த கர்மாக்களின் (பழைய நல்வினை தீவினை) விளைவாக இருந்தால் அதற்கேற்றாற் போல் பலனின் சிறப்பும் இருக்கும்.

சென்ற வருடம் சொந்த நாட்டுக்கு சென்றிருந்தேன். அதில் எனது சகோதரர்கள் திருமணம் செய்து கொண்ட இடைக்காடு எனும் ஊரில் சில கிழமைகள் என் மனைவியுடன் தங்கி இருந்தேன். அக்கிராமத்திற்கு ஏன் இடைக்காடு என்று பெயர் வந்ததன் காரணத்தை பல காலமாக அறிய முயன்று வருகிறேன். ஏதாவது இரு நகரங்களுக்கு இடைப்பட்ட காடாக முன்னொரு காலம் இருந்திருக்கலாம். ஆனால் சில பத்து வருடங்களுக்கு முன் அது ஒரு வெங்காயம் கொழிக்கும் பூமியாக, புதிய பூமியாகத் திகழ்ந்தது. அவ்வூரிலுள்ள அறிவை வளர்க்கும் வாசக சாலை மிகவும் பிரபலமானது. பல நூலகங்களில் இல்லாத காண்டேகர், பார்த்தசாரதி, அகிலன், கல்கி, சாண்டில்யன் மற்றும் பிரபலமான எழுத்தாளர்களின் தொடர் நாவல்களும் சமயப் புத்தகங்களும் பத்திரிக்கைகளும் அங்கு இருப்பது, அச்சிறு கிராமத்தின் மக்களின் அறிவுத் தாகத்தையும் தமிழ்ப் பற்றையும் காட்டியதை எனது பல்கலைக்கழக வாழ்க்கை விடுமுறை காலங்களில் என் தாயாரைக் காண வருகையில், அங்கு தங்கும் சில மாதங்களில் கண்டு கொண்டேன். அம்மன் கோயிலும் அதன் பின்னே தூரமாகத் தெரியும் காற்றாடியும் அதன் பின் தெரியும் செல்வச் சந்நிதி ஆலயமும் , நான் அண்ணாவின் வீட்டு கிணற்றடியில் நின்று வீட்டுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்ட பரப்பில் செழித்து இருக்கும், கத்தரிக்காய் தக்காளி மற்றும் மரக்கறி தோட்டத்தை வயலாக எண்ணி ‘ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும், ஏரோடும் எங்கள் வாழ்வில் தேரோடும்’ என்று நான் உரத்து படிக்கும் சீர்காழியின் பாடல் தண்ணீர் இறைக்கும் மோட்டார் சத்தத்தில் பலரால் கேட்க வாய்ப்பின்றி போனதையிட்டு கவலைப் பட்டதுண்டு. அந்த வாழ்க்கை சந்தோஷத்தை தற்போது தொலைத்து விட்டாலும், இம்முறை அதே அம்மன் கோயில் திருவிழாவின் போது, ஒலி பெருக்கியில் பாட்டுகள் ஒலித்த பொது அதைக் கேட்டும், அவ்வூரின் கோயில் ஒன்றிற்காக ஊரார் பணத்தில் போடப்பட்ட தார் வீதியையும், தேர் முட்டியையும், பொது பம்ப் செட்டையும் வெங்காயச் சங்க முன்னேற்றத்தையும் கண்ட போது மிக மகிழ்ந்தேன். அன்று சிறுமிகளாக பாவாடை சட்டையுடன் தோட்டத்தில் பெற்றோருக்கு ஒத்தாசையாக வேலை செய்த பாலகர்கள் இன்று, புதியதான மோட்டார் வாகனங்களில் நகரத்திற்கு (Jaffna town) வேலைக்கு, தனது கணவன்மார்களை பின்னால் ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்க்கும் போது, ஊர் முழுவதும் துவிச்சக்கர வண்டியிலும், நகரத்திற்கு பேருந்துகளிலும் சென்ற எனக்கு அவர்கள் என்னை முறுவலுடன் தமது மோட்டார் வாகனத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது ‘பார்த்த ஞாபகம் உள்ளதோ’ என்ற பாடல் வரிகளை மனதுக்குள் முணுமுணுத்து கொண்டேன்.

அதே அண்ணன் வீட்டில் தற்போது அண்ணியின் உறவினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மகனும் இன்னுமொரு தகப்பனை இழந்த சிறுவர்களும் எனது அண்ணியின் ஒன்று விட்ட சகோதரி வீட்டிற்கு பாடம் படிக்க வருவார்கள். சென்ற வருடம் நான் அங்கு தங்கி இருந்த போது அவர்கள் இருவருக்கும் பரீட்சைக் காலம்.

இரவில் விழித்திருந்து படிப்பார்கள். அதில் ஒருவருக்கு தலையிடியும் காலில் சொரிவும் ஏற்பட்டு அவரால் விழித்திருந்து படிக்க முடியவில்லை. அடிக்கடி சோர்வுற்று நித்திரை கொள்வார். இதனால் சில மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். சொரிவு அதிகமாகி காலில் சில சிறு காயங்களும் ஏற்பட்டன. இவரிடம் கிழக்கே தெரியும் அம்மன் கோவில் அம்மனிடம் நம்பிக்கை உண்டா என வினவினேன். அவர் உண்டு என்றார். உமக்கு அந்த அம்மன் அருளால் இவ்வேதனைகளில் இருந்து விடுபட்டு, நன்றாக சோதனைக்குப் படிக்க விருப்பமா என்று கேட்டேன். அதற்கு மிக ஆவலாக தான் நாட்டுப் பிரச்சினையின் போது ஜக்கச்சிக் காட்டில் ஓர் அம்மன் பக்தையினால் சில வியாதிகள் தன்னை விட்டு தீர்ந்ததாகவும் அத்தகைய சிகிச்சைகளில் தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும் இந்த பதினைந்து வயது சிறுவன் சொன்னான். பின்னர் அவரின் அனுமதியுடன் பிராண சிகிச்சையை ஆரம்பித்து, அவரின் நோய்க்குரிய பாகங்களை பிராணா வாயுவினால் சக்தியூட்டி, அதனை நிலைப்படுத்தி அவருக்கு போதிய நீர் கொடுத்து, சிகிச்சையை சுத்திகரிப்புடன் நிறைவு செய்தேன். சிகிச்சையின் போது அவர் மனதில் அம்மனையே நினைத்திருந்ததாகவும், பல ஒளி வட்டங்களையும், வெப்ப ஓட்டங்களையும், காலிலும் உடலின் மற்றைய பாகங்களிலும் உணர்ந்ததாகவும் கூறினார். இதில் தான் போதிய சுகம் பெற்றதாகவும் தலையிடி மறைந்து, ஒரு தெளிவு, புத்துணர்ச்சி (freshness) தலைப் பாகத்தில் சிகிச்சையின் பின் பெற்றதாயும் , அதனால் படிப்பதில் ஆர்வம் கூடியதாயும், சொறிவு குறைந்து, இரவில் தூங்கக் கூடியதாய் இருந்ததாயும் அடுத்த நாள் கேட்ட போது கூறினார். இச்சிகிச்சையை இன்னொரு நாள் அவர் சோதனை நாளுக்கு முன்னதாகச் செய்து முற்றாகக் குணப்படுத்த முடிந்தது. அதன் பின் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய அவசியம் வரவில்லை என்று நான் ஊர் விட்டு புறப்படும் போது கூறியது, இன்றைய சமுதாய இளம் சிறார்களுக்கு , அடிப்படை சமய, இறை சக்திகளில், நம்பிக்கை இருக்கும் வரை, எத்தகைய துயரையும் எதிர் கொள்வார்கள் என்ற நிதர்சனம், எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் தந்தது.

இரு வருடங்களின் முன் எனது பிறந்த நாட்டுக்கு, எனது மனைவியின் தாயாரின் சுகவீனம் காரணமாகச் செல்ல வேண்டி வந்தது. அவருக்கு கட்டில் புண் (bed sore) வந்து அதனால் பெரிதும் தனது எண்பது வயதில் கஷ்டப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் போதிய அளவு வீட்டிலே, வைத்தியரினாலும், பராமரிப்பாளர்களினாலும் (attendants) வழங்கப்பட்டிருந்தாலும், மனதளவிலும், பக்க விளைவுகளாலும், புண்ணின் வேதனையினாலும் மிகவும் துன்பப்பட்டு, ‘அம்மனே என்னைச் சுகப்படுத்து. காப்பாற்று’ என்று படுக்கையில் அரற்றியவாறு இருப்பார். இவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் (drugs) மிகவும் தாக்கத்தை உண்டாக்கி இவர் ஒரு மயக்க நிலையில், சிலவேளை உணவை உட்கொள்வதில் விருப்பமில்லாமல் அரைத்தூக்கத்தில் இருப்பார். இவர் முதுகு, தலை போன்ற பல நாடிகள் சந்திக்கும் இடங்களில் (சக்கரங்களில்) மிகவும் வேதனைப் பட்டார்.

இவரின் அனுமதியுடன் அவர் விரும்பியவாறு முதலில் சிரசிலிருந்து பாதம் வரை பிராண பரிசோதனையுடன் (scanning) சிகிச்சை ஆரம்பமானது. கால்களிலும் உடலின் பின்புற கீழ்பகுதிகளிலும் உண்டாகியிருந்த புண்களால் அவர் மிகவும் வேதனைப் படுகிறார் என்பதை, அவற்றில் பிராண பரிசோதனையின் போது நான் உணர்ந்த வெப்ப அதிகரிப்பினாலும் சல சல என்ற பரிச உணர்வுகளாலும் புரிந்து கொண்டேன். ஓர் அரை மணி நேர சிகிச்சை அவருக்கு போதிய களைப்பை உண்டாக்கியதால் பூரணமாகச் செய்ய முடியவில்லை. ஆனால் தனக்கு ஏற்படும் மாற்றங்களை ‘அம்மா அம்மா ‘ என்று அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்த வார்த்தைகளுடன் சொல்லி கொண்டிருந்தார். பல நிற மாற்றங்கள் தன் மூடிய கண்களுள் தென்படுவதாயும் மிகவும் இதமாக தன் சிரசு, மார்பு பகுதிகளில் உணர்வதையும், வேதனை அந்நேரத்தில் தெரியவில்லை என்றும் கூறினார். இந்த ஆரம்ப சிகிச்சையின் பின் நீர் அருந்தி விட்டு உறங்கி விட்டார்.

இவர் மிகவும் உடல் பலவீனமான நிலையில் இருந்ததால் இரு நாளுக்கு ஒரு முறை சிகிச்சை செய்வதே நல்லதென்று எனக்குத் தென்பட்டது. அன்றிரவு மிகவும் அளவாகச் சாப்பிட்டு விட்டு , தான் ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி’ என்று சொல்லிக் கொண்டிருப்பதாக (மனதில்) எம்மிடம் கூறினார். சில வேளை நெஞ்சில் வழமை போல் சளியினால் அடைப்பு ஏற்படும் போதும், இச்சிகிச்சை அவருக்கு நல்ல பலனைத் தந்தது; இதத்தை வழங்கியது. இவரின் உடல் நிலை புண்களின் கிருமிகள் உடலில் பரவியதால் (infection) வைத்திய சாலையில் சேர்த்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தேவைப்பட்டால் ஒக்சிஜன் (oxygen) கொடுக்கக கூடிய வசதிகளுடனும், இவருக்கு இதய சம்பந்தமான நோய் முன்னர் இருந்ததால் அதில் திறமை தகுதி உள்ள (specialist) வைத்தியரின் கண்காணிப்பில் சில கிழமைகள் வைத்திய பராமரிப்பு அறையில் (medical ward) தங்கியிருந்தார். இவர் கூடவே பகலில் நானும் தங்கி, இவருக்கு புண்களினால் உடல் வேதனையும், எண்ணங்களினால் மன வேதனையும் ஏற்படுகையில் பிராண சிகிச்சையை வைத்தியரின் அனுமதியுடனும், இவரது விருப்பத்துடனும் நாள் ஒரு முறை செய்து வந்தேன். ஆரம்பத்தில் இவருடைய இரத்தம் பல நாள் சரியான மருத்துவமில்லாததாலும், இவரது முதிர்ந்த வயது காரணமாகவும் நல் அணுக்களை இழந்து அதன் விகிதாச்சாரம் சராசரிக்கு மிகவும் கீழாக இருந்ததை விசேட மருத்துவரின் (specialist doctor), அன்றாட அறிக்கையில் இருந்து அறிந்து கொண்டேன். இவரைக் குணப்படுத்துவது கடினம் என்றும், தனியார் வைத்திய சாலையில் வைத்து சிகிச்சை செய்வதனால் செலவு கூடுமே தவிர போதிய பலன் தராதென்றும் முதலில் கூறிய வார்டு (ward) வைத்தியரும், தாதிகளும் விசேட வைத்தியர்களும் (Heart & Skin specialist), பின்னர் இவரது முகத்தில் ஏற்பட்ட பொலிவையும், உடல் தோலில் ஏற்பட்ட மினுக்கத்தையும், ரத்த அணுக்களின் சரியான விகிதாச்சாரத்தையும் கண்டு திருப்தி அடைந்து அவரை இரு வாரங்களுக்கு , தகுந்த மருத்துவ சிகிச்சையும், அதே பொழுது பிராண சிகிச்சையும் , அளித்து குணப்படுத்த முடியுமென்று, எனக்கும் என் மாமியாருக்கும், உறவினர்களுக்கும் உற்சாகம் தந்தார்கள். இதனால் தாதிகள் அவரது புண்களுக்கு கட்டு போட்டு, உடலை துப்புரவாக்கி உணவை (liquid food) அளித்த பின், நான் அவரை பிராண சுத்திகரிப்பு செய்தேன். அவர் என்னை பார்த்தபடி மனதிலும் பல சமயம் வாயாலும் ‘ஓம் பராசக்தி…’ என்று சொல்ல, ஓர் அரை மணி நேரம் பிராண வாயுவை என் மூலம் அவர் உடலில் எல்லா பகுதிகளுக்கும், குறிப்பாக புண் உள்ள பாகங்களுக்கு அதிகமாகவும் சிகிச்சை அளிப்பேன்.

ஒவ்வொரு நாளும் பிராணாவை என் மூலம் கடத்தி, அவருக்கு இச்சிகிச்சையை செய்வதாலும் , அவரின் நோயுடம்பின் அருகில் , அவர் உடலின் சகல உடற் கவசங்களின் (sheath) சூழலில் இருப்பதாலும் , மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் சில நாட்களின் பின் உணர்ந்தேன். இதனால் ஒன்றிரு நாட்களுக்கு பிராண சிகிச்சை செய்ய வில்லை. என்றாலும் அவரின் உடலில், உணர்வில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன. தேவாரங்கள் சொல்லும் போது மிகவும் முக மகிழ்வுடன் கேட்பார். இடையிடையே தமக்கு வேண்டியவரை தெளிவு நிலையில் உள்ள போது விசாரிப்பார்.

உடலில் ஏற்பட்ட தெம்பினாலும் (உஷாரினாலும்), உயிர் அணுக்களின் விகிதாச்சாரத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களினாலும் இவருக்கு சத்திர சிகிச்சை அறையில் (Operation theatre) சுமார் ஆறு பெரிய புண்களைச் சுத்தப்படுத்தி அவர் தோலைக் கொண்டே புண்களை மூடித் தைக்கப்பட்டது. என்னை அந்த சத்திர சிகிச்சை அறைக்குள் அந்த பிரசித்தி பெற்ற தோல் சிகிச்சை நிபுணர் (Skin specialist) முக உடல் பாதுகாப்பு அணிகளுடன் அனுமதித்து தான் செய்யும் தோல் சிகிச்சையை, உடலில் உள்ள புண்களை தோல்களினூடாக ஊசியைச் செலுத்தி மூடித் தைக்கும் வித்தையை எம் எல்லோருக்கும் காட்டினார். இடையிடையே ஐந்து பத்து நிமிடங்களுக்கு கையில் ஊசியுடன் சிறு தூக்கம் போடுவார். இவரின் வயது எண்பத்து ஐந்து, சில மணி நேரத்தின் முன்புதான் , அவர் காயப்பட்ட ராணுவச் சிப்பாய்களுக்கு இதே போன்ற சிகிச்சைகள் செய்து விட்டு இரவு 12.30 மணி அளவில் வைத்திய சாலை வந்து என் மாமியாரை இரண்டு மணியளவில் பார்க்க வருகிறார். தியேட்டர் ஒளிக் குமிழ்கள் அழுது வழிய, அப்போதுதான் தாதித் தொழிலுக்கு பழகும், இளம் பெண்கள் இருவரும் , ஓர் ‘ஓடலி’ (ஆண் தாதியும்) புடை சூழ, அந்நிய மனிதனான என்னுடன், உடற் சோர்வினால் மயக்க நிலையில் ஆனால் மயக்க மருந்து கொடுக்கப் படாத நிலையில் உள்ள என் மாமியாருக்கு அண்ணளவாக காலை ஐந்து மணி வரை (சுமார் மூன்று மணி நேரம்) மிகவும் பொறுமையாகவும், திறமையாகவும், கவனத்துடனும் சிகிச்சையைச் செய்தார். பல தடவை நான் மாமியாரின் நாடித்துடிப்பை (pulse) காட்டும் கணனித் திரையில் (Computer monitor) துடிப்பு சரியாக அண்ணளவாக ’90’ அளவில் அவரின் தற்போதைய உடல் நிலைக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்றும் , என்னால் இயன்ற பிராணாவை தொலைவில் இருந்து செய்யும் பிராணா சிகிச்சை முறையில் (distant prana healing) அவருக்கு அவர் புண்களைத் தைக்கையில் அடையும் வேதனையின் போது ஓரளவு அதைக் குறைப்பதற்கு உதவி செய்தேன். மயக்கம் கொடுத்து செய்யின் அவரின் உடல் நிலையை அறிந்து அதற்கேற்றவாறு சத்திர வைத்தியம் செய்ய முடியாததாலும், அவரின் வயதிற்கு அதிக அளவு மயக்க மருந்தைக் கொடுத்தல் (dose) ஆபத்தென்பதாலும் அவரை குறை (semi) மயக்க நிலையில் வைத்தே இச்சிகிச்சை செய்யப்பட்டது. முற்றாக சிகிச்சை முடிந்த பின் அவரை பழைய படி அவர் தங்கும் அறைக்கு கொண்டு சென்று பரிசோதித்து அவர் உடல் நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்த்து விட்டு தாதிமார் போய் விட்டாரகள். நானும் சில நேரம் அவருடன் இருந்து விட்டு, வீட்டுக்கு தூங்க சென்று விட்டேன். காலை சிறிது நேரம் கழித்தே சுமார் பத்து மணியளவில் எழுந்திருந்தேன். மதியம் மீண்டும் வெள்ளவத்தையில் உள்ள அந்த தனியார் வைத்திய சாலைக்கு சென்ற போது ஒரு வித்தியாசமான செய்தி காத்திருந்தது. அப்போது அது எனக்கு முக்கியமான (serious) விடயமாகப் படவில்லை. விடயம் யாதெனில், புதிதான வேலை பழகும் பெண் தாதி ஒருவர் தற்செயலாக , ‘செலைன்’ போகும் குழாய்க்கு திரவ உணவுக் (liquid food) கொள்கலனை (bottle) தொடுத்து விட்டாள். இதனால் ஊசியினூடாக இரத்தத்துடன் கலக்கும் செலைனிற்குப் பதிலாக, முட்டை, புரதம் போன்ற பால் உணவுத் திராவகங்கள் மாமியாரின் உடலினுள் புகுந்து விட்டன.

முதல் நாள் நடந்த வைத்தியத்தினால் மாமியாரும் மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு துணையாக இருந்த பராமரிப்பு பெண்ணும் (attendant) முன் தினம் கண் விழித்திருந்து பார்த்த, அசதியினால் சற்றே கண் அசந்து விட்ட நிலையில் இது நடந்து விட்டது. சடுதியாக இதைக் கவனித்த பராமரிப்பு பெண் உடனடியாக தாதியிடம் சென்று இது பற்றி சொல்லி இதனை மாற்றி திரவ உணவை வாய்க்குள் செல்லும் குழாய்க்குள் சரியாக செல்லச் செய்திருக்கிறார். இந்த ஒரு நிமிடத் தவறுதல் விதியின் விளையாட்டா அல்லது அந்த வைத்திய சாலை நிர்வாகத்தின் நிர்வாகக் குறைவா அல்லது அந்த தாதியின் பொறுப்பற்ற தன்மையா என்று யாரால் சொல்ல முடியும்? எல்லாம் சேர்ந்தே விளைவை தீர்மானித்ததை அந்தி சாயும் நேரத்தில் கண்டு கொண்டோம்.

நான் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று, அங்கு நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கு பற்றி, திரும்பி, சில தேவார பஜனை ஒலி நாடாக்களுடன் (cassettes) வைத்திய சாலைக்கு வந்த போது, ஒரு பதற்ற நிலை மாமியார் இருந்த அறையில் நிலவியது. மதியத்தின் பின் வந்த ‘வாட்’ வைத்தியர் மாமிக்கு காய்ச்சல் (fever) அதிகமாக கண்டுள்ளதால், அதனால் சில தீவிரமான மருந்துகளை, தொற்றல் நோய் (infection) இரத்தத்தில் கூடுதல் ஆனதால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதைத் தடை செய்ய கொடுத்து இருந்தார்கள்; அவரின் நிலை சிறிது கவலைக்குரியதாக அப்போது இருப்பதாகவும் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதனால் எனது மனைவியின் குடும்பமும் சில உறவினர்களும் சிறிது பதட்டத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். தாதியரின் முகத்திலும் கலவரம் இருந்தது.

உடனடியாக என்னைப் பிராணாவினால் சுத்திகரித்து, ‘ஓம்’ எனும் மந்திரத்தால் பிராணாவை போதிய அளவு எனக்குள் ஏற்றி அவரின் நெற்றியில் கோவிலில் இருந்து கொண்டு வந்த (வரும் வழியில் வழிப் பிள்ளையார் கோயிலுக்கு சென்றிருந்தேன்) திருநீற்றை இட்டு சிகிச்சையை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் செய்தேன். அவர் முகத்தில் அசாதாரண ஒலி தோன்றியது. பக்திப் பாடல்கள் கொண்டு வந்துள்ளேன் என்றும் நாளைக்கு காதுக்குள் மட்டும் கேட்கும்படி ஒலிக் கருவிகளை கொண்டு வருகிறேன் என்று சொல்லி, இன்று நானே உங்களுக்கு பஞ்ச புராணங்களை படிக்கிறேன் என்று என்னை அறியாமல் கூறி அவரைப் பார்த்தேன். அவரும் சிறிது வாய் திறந்து தனக்கு விருப்பம் என்பது போல் முணுமுணுத்தார்.

நான் பாடிக் கொண்டிருக்கும் போது இருதய விசேட வைத்தியர் (Heart specialist) தாதியருடன் வந்து அறை வாசலில் உள்ளே வரக் காத்திருந்தார். இறுதியாக புராணத்தை சொல்கையில் அதைப் பஞ்ச புராண ஒழுங்கு வரிசையில் மாறிச் சொல்லிய ஒரு தவறு அன்று நடந்து விட்டது. இதுவும் விதியின் விளையாட்டோ என்று எண்ணிய போது, வைத்தியர் சில பரிசோதனைகளை உடனடியாக செய்து சில மாற்று மருந்துகளைக் கொடுககும்படி தாதியருக்கு உத்தரவிட்டு சென்றார். அவர் செல்லும் போது ‘நீங்களும் மிகவும் முயற்சியெடுத்து பிராணாவினால் அவரைக் குணப்படுத்த முயல்கிறீர்கள். ஆனால் அவர் உடல்நிலை தெளிந்து உள்ளார். நீங்கள் களைத்து மெலிந்து விட்டீர்கள்.இனியும் இதைத் தொடர்வது உங்களுக்கு நல்லதல்ல. அவரின் நிலை சரி வரலாம். ஆனால் திடமாகக் கூற முடியாது. அவருக்கு அண்மையில் ‘infection’ ஆகியுள்ளது’ என்றார். .எனக்கு இப்போதுதான் அந்த ‘infection’ சத்திர சிகிச்சை அறையில் (operation theatre) ஏற்பட்டிருக்கலாம், என்று அவர் கூறிய முறையில் இருந்து தெரிய வந்தது.

பின்னர் வீடு சென்று இரவு உணவருந்திக்கொண்டிருக்கையில், மைத்துனர் மாமி இறந்து விட்டார் என்று தொலைபேசியில் கூறிய செய்தியைக் கேட்டதும் நான் அதிர்ந்தாலும், இது விதியின் வழியே என்று அறிந்து, உடனடியாகச் சென்று எதோ ஒரு முறையில் அவரை உயிர்ப்பித்துவிட முடியும் என்ற நோக்கம் தலைதூக்கியது. காரணம், மைத்துனர் அவரது துடிப்பு ‘pulse’ கணனியில் சில நேரம் ஏறி இறங்குவதாகவும், ஆனால் வந்த தாதியரும், ward வைத்தியரும், அவரின் வயது, உடல் நிலையைக்கருத்திற்கொண்டு அவருக்கு மூச்சைக் கொண்டு வரும், வைத்திய உபகரணங்களால் (medical aids) செய்யும் அமுக்க சிகிச்சையை செய்ய விரும்பவில்லையென்றும், அதனால் என்னை உடனடியாக வரும்படியும் சொல்லியதே. பத்து இருபது நிமிட நடையின் பின் நான் அங்கு சென்றபோது, கணனியில் ஒரு சமாந்திர கோடே நாடித் துடிப்பாகத் தென்பட்டது. என்றாலும், அவரின் நெஞ்சில் சில கணம் கையை வைத்து பிராண சிகிச்சை செய்தேன். மைத்துனர் சில அசைவுகள் அப்போது கணனியில் உண்டானதென்று சொன்னாலும் பிராணா உடலை விட்டுச் சென்ற பின், அதில் அவ்வளவு பலனில்லை என்பது உணர்ந்து அப்போதும், உடனடியாக ward வைத்தியரை, கீழ்தளத்தில் உள்ள அவசர சிகிச்சை அறைக்குள் சென்று சந்தித்து, மாமிக்கு அமுக்க சிகிச்சை கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் அவரோ, மாமியின் ஆவி பிரியும் முன்பே வைத்தியரின் ‘இறப்புப் பத்திரம்’ (death certificate) எழுதி, அதில் தொற்று நோய் (infection) காரணமாக ஒரு வித காய்ச்சலால் அவர் இறந்துவிட்டாரென்றும், தம்மால் அவருக்கு , அழுத்த சிகிச்சை கொடுக்க முடியவில்லையென்றும், அவரின் வயதுக்கு அவர் இந்நோயால் இருப்பதை விட இறப்பதே எல்லோருக்கும் நல்லதென்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதன் பின்னும் மேல் தரையிலுள்ள மாமியார் இருக்கும் தளத்திற்கு சென்று என்னால் ஆனா பிராணா சிகிச்சையை செய்வோம் என்ற உந்துதலில் படிகளில் தாவி ஓடினேன். ஆனால் அங்கு தாதியர், மாமியாரின் உடைகளைக் களைந்து, அவருக்கு வேண்டிய இறுதி சுத்திகளைச் செய்து, தாடையையும், தலையையும் சேர்த்து ஒரு துண்டால் கட்டிக்கொண்டிருந்தார்கள், என்னால் அந்நிலையில் உள்ளே சென்று ஒன்றும் செய்ய முடியவில்லை. வெளியில் வந்து அவரை குளிர் சாதனமுள்ள ஓர் அறைக்கு கொண்டு செல்லும் வரை காத்திருந்தேன். இதன் பின் நடந்தவை பல; பல நம்பத்தகாத செய்திகளும், அனுபவங்களும் அன்றைய இரவு 9.30 மணியளவில் இருந்து அடுத்த நாள் 3.30 அதிகாலை வரை நடந்தது. காசு ஒன்றே குறிக்கோளாக இயங்கும், வைத்திய பராமரிப்பு நிலையங்களும், அதன் அதிகாரிகளும், இரவு காவல் உத்தியோகத்தர்களும் (supervisor) எவ்வாறு ஓர் இறந்த உடலை அதன் ஆத்மாவை மதியாது சிதைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்ட எனக்கு மறு நாள் இன்னொரு அதிர்ச்சி, நான் முற்றிலும் சிந்திக்காத ஒரு விடயம் தெரியவந்தது.

அடுக்கடுக்காக முதல் நாள் (இறந்த அன்றே) 10.00 மணி காலையிலிருந்து இரவு 10.00 மணி வரை நடந்த சில முதற்கட்ட நிகழ்ச்சிகள் எதற்காக நிகழ்ந்தன? இவையாவும் தவறுதலாக மாறிக் கை நரம்புகளூடாக இரத்தத்தில் கொடுக்கப்பட்ட அல்லது கலக்கப்பட்ட திராவக உணவுதான், உடனடியான இரத்த தொற்று நோய்க்கு (infection in blood) காரணமென்றும், அதனை நாம் அறியும் தலைப் பட்சத்தில், அந்த வைத்தியர்களுக்கும், தாதிகளுக்கும், நிர்வாகத்திற்கும் நல்லதல்ல என்றும் அறிந்து, இதனைச் சீர்ப்படுத்த ஒரு வழியும் தெரியாத நிலையில் இயற்கையாக, வயதின் முதிர்ச்சியாலும், இரத்தத்தில் ஏற்கனவே உள்ள நச்சுக்கிருமிகளின் தாக்கத்தாலும் இது ஏற்பட்டுள்ளதென்றும், இந்த நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை மேற்கொண்டு பிரேத பரிசோதனையில் தெரியவருமென்று கருதியோ என்னவோ, 10.00 மணி இரவுக்குள் மைத்துனரிடம் (மாமியின் மகன்) நான் செல்லும் முன் கையெழுத்து வாங்கி, இதில் எவ்வித சந்தேகமுமில்லை யென்று சோடனை செய்துள்ளார்கள்.

பிரேத பரிசோதனை செய்யின், எதனால் இந்த திடீர் மரணமென்று கண்டு கொள்ள முடிந்தாலும், இதற்கு பிரேதம் சில நாள் பிரேத அறைக்குள் இருக்க வேண்டிவரும். அத்துடன் பரிசோதனையின் முடிவு ‘infection’ என்று தான் வருமே யொழிய, எச்சந்தர்ப்பத்தில் இது நடந்துள்ளதென்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலை ஒன்று உண்டு. ஏனெனில் புண்ணிற்கு ‘ஆபரேஸன்’ அறையில் கட்டுப்போட்டு முடிந்ததற்கும், தவறுதலாக திரவ உணவு நேரடியாக இரத்தத்துடன் கலந்தததற்கும், இடையேயுள்ள நேர வித்தியாசம், மூன்று மணித்துளிகளே!

அத்துடன், இந்தத் தனியார் ஆஸ்பத்திரியின் அதிஸ்டவசமோ, அல்லது துரதிஸ்டவசமோ, குளிர் பிரேத அறை (mortuary) இங்கு இல்லை. மாமியாரை ஒரு ஐஸ் கட்டிகள் வைக்கும் தனி அறைக்குள்ளேயே, கட்டிய பணங்களுக்கும், அன்றைய கணக்குகளுக்குமான ரசீது தரும் வரை (இரவு 12.00 மணியளவில் தரப்பட்டது), அதை நாம் முற்றாகக் கட்டி முடிக்கும் வரை, வேறு குளிர் பிரதேச அறையுள்ள எந்த இடத்துக்கும் மாற்ற முடியாத நிர்வாகச் சிக்கல். இதனால் பிரேதம் மறுநாள் காலை 3.30 மணி வரை குளிர்சாதனப் பெட்டியுள்ள அறையில் மட்டுமே வைக்கப்படிருந்தது நியாயமற்றது. இதனை அங்குள்ள ‘சூப்பர்வைசர்’ (supervisor) இடம் கேட்டபோது வைத்தியசாலை நிர்வாக அதிகாரியை (chief director) 12.00 மணியின் பின் தொடர்பு கொள்ளமுடியாதென்றும், வேண்டுமானால் இதனை மறுநாள் காலை முறையீடு செய்து அதற்குரியவர்களை ‘court’ இற்கு கொண்டு போகும் படியும் சொல்லித் தப்பித்துக்கொண்டார்கள். இதனால் 3.30 மணியளவில், எல்லாப் பணத்தையும் இரவோடு இரவாக கைமாற்று செய்து கட்டியபின், நேரடியாக ‘இறுதிக்கிரியைகள் செய்யும் சேவை’ (funeral service) கட்டிடத்தின், குளிர் அறைக்கு (mortuary), நாமே ‘ஆம்புலன்சை’ வரவழைத்து அனுப்பிவைத்தோம். இந்த அனுபவம், பிராணா சக்தியின் அனுபவம் மட்டுமல்ல, இதனால் இயங்கும் மனிதப் பிணங்கள் சிலருடன் வாழ்ந்த சில கிழமை வாழ்க்கையும் ஆகும்;

‘ஓம் ரெக்கி’ (Aum Reiki) எனும் மாதம் ஒருமுறை கூடும் பிராணா பயிற்சி, தியானம், பிராணசிகிச்சை அங்கத்தார்களினால் நடத்தப்படும் ஒரு மையம் (Centre) உண்டு. அதற்கு பலகாலமாக ஒரு வழிநடத்துனர் (facilitator) உண்டு. அவர் வயதில் குறைந்தவர் என்றாலும், நல்ல அறிவும் அனுபவமும் கொண்டவர். பல ‘ரெக்கி மாஸ்டர்’ களும், இந்த கலையை கற்பவர்களும், சிகிச்சை பெற விரும்புவர்களும், சுமார் ஐம்பது பேரளவில் இதற்கு வருவதுண்டு. நான் சில வருடங்களின் முன் பல தடவை இதற்கு சென்றிருக்கிறேன். இங்கு முதலில் தியானம் நடைபெறும். இதிலொரு வித்தியாசம் என்னவென்றால் ஒவ்வொரு தடவையும் பல வித முறைகளால், விரும்பிலன் எம்முடைய கண்டுபிடிப்புக்களையும் இணைத்து, இதனால் ஏற்படும் வித்தியாசமான பலன்களை, வழிநடத்துபவருடன் (Leader) சேர்ந்து பரீட்சித்து பார்க்கலாம். இங்கு பயின்ற, அனுபவமுள்ள பலர் கலந்து கொள்வதால் அவர்களுடைய தனிப்பட்ட திறமைகளையும் மற்றவர்கள் தெரிந்து கொண்டு தம்மை இச்சிகிச்சை சேவையில் வளர்த்து கொள்ள முடிகிறது.

இங்கு ஒருவருக்கு, பலர் ஒரே நேரத்தில் வேறுபட்ட சக்கரங்களுக்கு பிராணாவை எம்முடல் வழியாக, கையின் மூலம் செலுத்தி சிகிச்சையளிப்போம். ஒரு கூட்டு பிரார்த்தைனையின் போது அதனால் உண்டாகும் ஒலி அதிர்வு, மன எழுச்சி, ஒருவரின் தனி பிரார்த்தனையை விட வலிவு கூடியதாக, அதிக பலன் தருவதாக அமைகிறதோ, அதேபோல் இதில் (பிராணா சிகிச்சை) ஈடுபடும் பலரின் நோக்கமும், செயலும் ஒன்றாக, சிகிச்சை விதி முறைகளுக்கு அமைந்து இருக்கையில், கூடிய பலனை தருவதை அவதானித்திருக்கிறேன்.

எமது தாய்நாட்டில், 2009இல் நடைபெற்ற போரின் விளைவாக வன்னிப்பகுதியில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பேரழிவு நடந்த போது, இறந்த ஆன்மாக்கள் சாந்தியுறாமல் தத்தளித்துத் திரிந்த வேளையில் அவற்றுக்குச் சாந்தி செய்யும் முகமாக பல மெல்பேண் கோவில்களில் யாகங்களும், கூட்டு பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடைபெற்றன. இந்த வேலையில் ஒரு சனிக்கிழமை மேற்குறிப்பிட்ட பிராண (Reiki) மையத்திற்கு சென்றிருந்தேன்.

அன்று நடைபெற்ற முதல் கிழமை அனுபவம் பற்றிய கலந்துரையாடலில், எவ்வாறு ஒரு பரீட்ச்சார்த்தமான கூட்டு முயற்சி, பிராணாவின் வலிமையை வியக்கும் தன்மையில் வெளிக் கொணர்ந்தது பற்றிப் பேசப்பட்டது.

எல்லோரும் ஒரு வட்ட வியூகத்தில் பிரார்த்தனை அறையில் (இரண்டாம் மாடி) ஒருவருக்கொருவர் மிக அருகில், ஒருவரின் கைகளை மற்றவர் கோர்த்தபடி நின்று, மனதின் வலிமையால் இயற்கைப்பிராணாவை உடலில் வரவழைத்து, அதனை இருதயத்திலிருந்து சக்தி அலைகளாக அந்த வட்ட அமைப்பின் மையத்துக்கு (centre) (மனத்தில் ஒரே நல்ல நோக்கமாக கொண்டு) எல்லோரும் சக்தி பிழம்பை (Mass of energy) உருவாக்கினார்கள். அந்த மையத்தில் எல்லோலாரும் குவிக்கப்பட்ட அதி வலிமையான சக்தி, ஒரு சிறு புயல் போல் நாலா பக்கமும் மையத்திலிருந்து புறப்பட்டு, அதன் தாக்கத்தினால் (force) வியூகத்தில் இருந்த எல்லோரையும் அதன் தியான மண்டப எல்லையான சுவர்களுக்கு தள்ளி, தன்னை சுவரில் இருந்த ஜன்னல்களூடாக தன் வேகத்தை குறைக்க வெளியேறியது. இதில் பலர் தாங்கள் சுவருடன் மோதியதாயும், சிலர் தாம் ஜன்னல் அருகில் நின்றதால் அதனுடாகத் தூக்கி எறியப்படும் நிலையை அனுபவித்ததாகவும் (ஆனால் வெளியில் தூக்கி வீசப்படவில்லை) கூறினர்.

நான் சென்ற மறு கிழமை அன்று, அதை ஒரு வித்தியாசமான முறையில் பரீட்சிப்போம் என்று அந்த இளம் வழி நடுத்தனர் (குரு) சொன்னார். அதாவது ஒவ்வொருவராலும் உருவாக்கப்படும் அந்த சக்தி, எம்மைத் தாக்காது, ஒரு நல்ல விடயத்துக்குப் பயன்படும்படி, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி தியானியுங்கள் என்றார். ஒரே நேரத்தில் எல்லோரும் இச்சக்தியை அந்த நோக்கத்துக்காக மையத்தில் உருவாக்குங்கள் என்றார். இப்போது இதன் மொத்த விளைவு சென்ற முறை போல் எல்லோரையும் சுவர் நோக்கித் தள்ளுகிறதா (அதாவது வியூக மையத்திலிருந்து வெளி நோக்கி) என்று பரிட்சிப்போம் என்றும் சொன்னார் .

என் மனதில் எப்போதும் இப்பிராண சக்தி சிகிச்சையை எந்நாட்டில் தேவை வேண்டிய இடங்களில் பயன்படுத்த வேண்டுமென்ற விருப்பம் ஏழு வருடங்களாக இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அதன் சக்தியை நோயைக் குணப்படுத்தலுக்கு பாவிக்கத் தயங்கியதில்லை. இப்போது, ஒரு இடத்திலிருந்து கொண்டே சுமார் ஐம்பது, பிராணா சக்தி பிரயோகத்தை அறிந்தவர்களுடன், ஒரு குருவின் தலைமையில், சுயநலமற்ற ஒரு நல்ல செயலுக்காக, ஒரு பிரமாண்டமான சக்தி மலையை, பிழம்பை வன்னி மண்ணில் கடைசிக் கட்டத்தில், குலை குலையாக, எந்தவித பாவமும் அறியாமல், இளையவர், முதியோர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், மற்றும் உயிரினங்கள் என்றும், நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், ஆண்டி யென்று பாகுபடுத்தபடாது காவுகொண்டபோது, சொர்கத்துக்கோ, நரகத்திற்கோ இல்லாமல் இடைப்பட்ட அந்தரத்தில் ஆவிகளாக நடமாடி, தாமும் துன்புற்று மற்றவரையும் மனக்கலக்கமடையச் செய்யும், அந்த அந்தரத்திலுள்ள ஆவிகள் அமைதியடைய, விடுதலையடைய, பரிசுத்த ஆவியுடன் ஒன்றாக, இந்த மெல்பேண் நல்ல மனித ஆத்மாக்களின் மனச்சக்தி – பிராணசக்தியிலிருந்து பிரார்த்தனையின் மூலமும், தியான – பிராணசக்தி மூலமும் தோன்றிய சக்தி, இங்கிருந்து, மொத்தமாக அந்த வன்னி வனப் பகுதியில் சக்தி மழையாகப் பொழிய வேண்டுமென்றும், அதனால் அங்கு அந்தரித்துத் திரியும் ஆவிகள் யாவும் விடுதலையடைந்து, அடுத்த பிறவியையோ, முக்தியையோ, அவர்களின் மன ஏக்கத்துக்கு ஏற்ப அடைய வேண்டுமென்றும், அதனால் அப்பிரதேசத்தில் அவலக்குரல் நீங்கி, அமைதியும் சுபிட்சமும் கிடைக்க வேண்டுமென்றும், எல்லோராலும் குவிக்கப்பட்ட சக்தி வட்ட மையத்தில் உருவாகிய நிலையில் பிரார்த்தித்துக் கொண்டேன்.

கூட்டு முயற்சியின் பலனோ, எல்லோரதும் நல்லெண்ணமோ, அல்லது பிரார்த்தனையின் விளைவோ, எல்லோரும் எதிர்பார்த்தபடி, எம்மில் அந்தச் சக்தியின் வெளிநோக்கிய விசை எம்மைத் தள்ளி தனது பலத்தை காட்டவில்லை. நான் நினைத்தது போல் (பலரும் நினைத்திருக்கலாம்) அச்சக்தி, வன்னியில்தான் எழுந்து சென்று விழுந்ததோ, அதைப் பராபரமே அறியும். ஆனால் எனக்கு அதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. அது போல் மற்றவர்களும் அடைந்திருகிறார்கள் என்பதை அவர்கள் முகம் காட்டியது.

ஆனால், ‘லீடரோ’, ஏன் இன்று எல்லோரும் சரியான முறையில் சக்தி வெளிபாட்டை செய்யவில்லையோ அல்லது ஏதாவது ஒரு இடையூறு ஏற்பட்டு இச்சக்தி விரயமாகிவிட்டதோ! ஜன்னல்கள் கூட இதன் தாக்கத்தால் படபடக்கவில்லையே; தானும் ஒரு தள்ளு விசையை உணரவில்லை யென்று சொன்ன போது எனக்கு, ஏன் அவர் இந்தப் பரீட்சையின் நோக்கப்படி, அச்சக்தி பிழம்பு வேறொரு நன்மைக்காக மேல் நோக்கி எழுந்து சென்றிருக்கக் கூடாதென்றும், அதனால் வேறு நற்பலன் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எண்ணவில்லை என்று நான் உணர்ந்த போது, எவ்வளவு அனுபவம் இருந்தாலும், நம்பிக்கை இருந்தாலும் அவை சரியான முறையில் சிலவேளையில் புரிந்துகொள்ள முடியாத தலைவர்களும், குருவானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்ற முடிவுக்கு வந்தேன்.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சிறிது நேரத்திற்கு பின் எல்லோரும் சம்பாஸித்து (பேசி) கொண்டிருக்கையில், ஒரு பெண்மணி, தான் பளிங்குக் கற்கள் (Crystal) மூலம், ஆவியை அதன் விளைவுகளை அறிபவர் என்றும், சில ஆவி உருவங்கள் தனக்குத் தெரிபவையென்றும், இந்த சக்தி உருவாக்களை நாம் கூட்டாகச் செய்த போது, என்னைப் பாதுகாக்கும் பாவனையில் என் பின்னால் ஒரு சிவப்பு உடை அணிந்த பெண்மணி ஒருவர் மலர்ந்த முகத்துடன் இருந்தார் என்றும், சிறுது நேரத்தில் அவர் மறைந்து விட்டாரென்றும், அவர் நிலை (pose) அந்த மண்டபத்தின் சுவர் ஓரம் அமைந்திருந்த ஒரு நடனமாடும் சிவனின் (நடராசர்) உருவத்தில் இருந்ததென்றும், ஆனால் அவர் பெண்மணி என்றும் கூறினார். அவர் எனக்குத் தெரிந்தவராக இருக்கக் கூடும் என்றும் கூறினார். எனக்கு இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அப்பெண்மணி கூறியதில் உண்மை உண்டு என்றும், அவர் பற்றி தெரிந்தவர்கள் கூறியபோது நம்பினேன். இவ்வாறு, இப்பிராணாசக்தி சிகிச்சையின் போது, அது பற்றி அறிய வருபவர்களில் பலர், பல சக்திகள் கொண்டிருந்ததை காணும் போது எவ்வாறு இந்த அரிய பிராணாசக்தி சிகிச்சை மற்றவரையும் வரவழைத்து அவர்களை நல்ல சேவைக்கு பயன்படுத்துகிற தென்று அறிந்த போது, தொடர்ந்து இது பற்றி அனுபவம் அடைய வேண்டுமென்றும், இச்சேவை முறையை, அதன் பலனைப் பலருக்கும் தெரியப்படுத்தவேண்டுமென்றும் அவா எழுந்ததே இப்புத்தகத்தின் நோக்கமாகும்.

பிராண சிகிச்சை (Reiki healing) என்பது ‘ஆத்மா சிகிச்சை’ (Soul healing), மந்திர அல்லது மாந்த்ரீக முறை (Mantric) என்பவற்றிலிருந்து முற்றும் வேறுபட்ட தத்துவத்தையும், செயல்முறையையும் கொண்டது மேலும் இதனை கெட்ட மந்திர வாதிகளின் (Witch), மாயாஜாலம் (magic) என்பவற்றுடனோ, பளிங்கு கற்கள் வாசிப்பு (Crystal reading), அல்லது வேறு ஆவி விரட்டல் போன்ற இந்திய வழிமுறைகளோடு ஒப்பிடக் கூடாது. பலர் இதனால், பிராண சிகிச்சையை சந்தேகக் கண்களினால் பார்க்கிறார்கள். இது அவ்வாறாயின், இம்முறை உலகளாவிய முறையாக நிரந்தரமாக, அங்கீகாரிக்கப்பட்ட சிகிச்சை முறையாக, எல்லா இனங்களிலும், எல்லா மொழி பேசும் மக்களிடையேயும் பிரபலமடைந்திருக்க முடியாது. எவ்வாறு ஒரு ஆங்கில மருத்துவ வைத்தியரிடமிருந்து மாத்திரைகளையும், இதமான வார்த்தைகளையும் பெற்று மனிதன் குணமடைகிறானோ, எவ்விதம் மத குருக்கள் தரும் போதனைகளாலும், ஆசிர்வாதங்களாலும், அவர்கள் ஆண்டவருக்கு படைத்து எமக்கு அளிக்கும் பிரசாதங்களாலும், ரொட்டி துண்டுகளாலும், மனிதன் மன நோயில் இருந்தும் உடல் வேதனையிலிருந்தும் மீள்வது போல், இந்த அண்டங்களுக்கே காரணமான பிரணவத்திலிருந்து உருவாகிய தெய்வசக்தி, அதற்குரிய ஊடகமான ஒரு தகுதிவாய்ந்த சிகிச்சையாளனூடாக, இன்னொரு உயிருக்கும், உயிரற்ற சடத்துக்கும், புத்தொளிர்வையும், நோய் நீக்கத்தையும், வலிமையையும் தருமானால், அதுவும் ஒரு வரவேற்கத்தக்க, அங்கீகரிக்கப்பட்ட உடல், உள நிவாரண செய்முறையாகத் தான் இருக்கவேண்டும்.

நான் பல ஆத்மா சிகிச்சை (Soul healing), பட்டறை (workshops) களுக்குச் சென்றுள்ளேன். அமெரிக்காவிலிருந்து வந்த பல (white), சீன குருமார்களின் பட்டறைகளுக்கும், விரிவுரைகளுக்கும் சமூகம் கொடுத்துள்ளேன். அவர்களும் சக்கர, குண்டலினி அடிப்படையில் தான் இச்சிகிச்சையைச் செய்கிறார்கள். அனால் அவர்கள், எல்லோர் முன்னிலையிலும் செய்முறைக்காக, பலரின் பழைய வாழ்க்கைச் சம்பவங்களை வெளிகொணர்வார்கள். பழைய கர்மா தாக்கங்களை நிவர்த்தி செய்ய எவ்வாறான பயிற்சிகளைச் செய்யவேண்டுமென்றும், அதற்கு எவ்விதம் வழிநடத்துனர் (facilitator) அல்லது குருவானவர் உதவக்கூடும் என்றும் விவரிப்பார்கள். மனிதனின் ஒவ்வொரு உடற்கூற்றையும், இறைவனைத் தியானித்து அதற்குரிய மந்திர முறைகளால், புதுப்பிக்கலாம் (replacement) என்று அதற்கான உதாரணங்களையும், சிகிச்சை பெற்றவர்களைக் கொண்டே, கூட்டத்தில் சொல்ல வைப்பார்கள். எம் சமூகத்துவர்க்கோ, அல்லது பெரும்பான்மையருக்கோ இது ஒரு பித்தலாட்டமாகக் கூடத் தென்படலாம். சில வேலை இவை இச்செய்முறையைச் சற்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கூறுவது போலவும் தோன்றலாம். பழைய பிறவிகளில் (incarnations or past births) எமக்குள்ள நல்ல, தீய பழக்கங்களை, குறைகளை எல்லோர் முன்னிலையில் அல்லது குருவிடம் இருந்து தெரிந்து கொள்ள பலர் விரும்புவதில்லை. அதே போல் இனி நடக்கப்போவதையும் அறிய விரும்பாததற்குப் பல காரணங்கள் உண்டு. அதைப் பற்றி இங்கு சொல்லித் தெரிவதில்லை.

ஒருமுறை இந்த, ஆத்மா முறை சிகிச்சை விளக்கச் சொற்பொழிவுக்கு எனது நெருங்கிய உறவினர் ஒருவரைக் கூட்டிச் சென்றிருந்தேன். அவரின் பழைய பிறப்புக்களால் ஆத்மாவில் ஏற்பட்ட தாக்கத்தை நீக்கி, அவருக்கு புதிதாக சில உடல்பாகங்களை இறைவன் மூலம் பெற்று அளிப்பதாகக் கூறி அக்குருவானவர் இச்சிகிச்சையையளித்தார். இதனால் அவர் தற்காலிக குணம் பெற்றதாகச் சொன்னாலும், அதில் அவருக்கு நம்பிக்கையில்லாததாலும், அது ஒரு விசித்திரமாக அவருக்கு இருந்தாலும் அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை; பூரண பலனை அடைய முடியவில்லை.

அவருக்கு பிராண சிகிச்சைக்கும், அந்த ‘Soul healing’ இற்குமுள்ள வேறுபாட்டை உணரச்செய்தேன். இவ்வாறு பல சிகிச்சை முறைகளும், அதனால் பலன்களும் இருந்தாலும், இவற்றால் சில மன உளைச்சல்களும், குழப்பங்களும் குடும்பத்தவரிடையே உருவாகச் சாத்தியமுண்டு. ஆனால் பிராணா சிகிச்சையின் போது அது முற்றாக இயற்கை சக்தியை அடிப்படையாகக் கொண்டு எவ்வித ஆவிகள் சம்பந்தமான (spirit related) அழைப்புக்களையோ, செய்முறைகளையோ கொண்டிராததால், இது சமய, கலாச்சார வேறு பாடின்றி, நாடு இனப் பாகுபாடின்றி, ஆண், பெண் வித்தியாசமின்றி ஒரு பிரபஞ்ச சக்தி நிவாரண வழிமுறையாகவுள்ளது.

இதற்கு பரிசம் (தொடுகை) தேவையில்லை; அவசியமில்லை; ஒருவரைத் தொடாமலே இச்சிகிச்சையை செய்யலாம். அல்லது வெகு தூரத்திலிருந்தும், செய்பவரும் செய்யப்படுபவரும் ஒரே நேரத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நேர இடைவேளையில் எண்ண அலைகள் ஊடாக, பிராணா சிகிச்சை செய்யலாம்.

பல சக்திகள் பெற்ற குருமார்களும், ஆன்மீகவாதிகளும், தவ வலிமையாளர்களும், இச்சிகிச்சையின் மூலம் உடனடியாகவே தொடுகையில்லாமலோ (blessings) அல்லது சிறு பரிசத்துடனோ (touching) பல மனித சீவராசிகளின் நோய்களைத் தீர்த்ததை நாம் சரித்திரத்திலும், மத நூல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும், ஏன் இன்று கூட குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் கண்டும், கேட்டும், அறிந்தும் உள்ளளோம்.

இனி, பிராணச் சிகிச்சை முறையைப் பயின்று அதை எவ்வாறு, எத்தகைய நோய்களுக்கு நிவரணமுறையாகப் பயன்படுத்தலாமென்றும், அதன் செய்முறை விதிகள், முறைகள் , பலா பலன்கள் பற்றியும் விரிவாக அடுத்த தொகுதியில் பார்க்கலாம்.

நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published.